Shoaib Bashir: இங்கிலாந்து வீரருக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம்... 'நச் 'பதில் கொடுத்த ரோஹித் சர்மா!

நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்கான விசா இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவருக்கும் கிடைக்கப்பட நிலையில் சோயப் பஷீருக்கு மட்டும் கிடைக்கவில்லை

Continues below advertisement

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷப் போட்டிகளின் அங்கமாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி 25) தொடங்குகிறது. அதன்படி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவுடன் விளையாடுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் கடந்த் ஓர் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறது.

Continues below advertisement

நாளை போட்டி தொடங்க உள்ள சூழலில் இங்கிலாந்து அணி தங்களது ஆடும் லெவன் வீரர்களை அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேமி ஆண்டர்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.அதன்படி, நான்கு  ஸ்பின்னர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர். லெக்பிரேக் பவுலர் ரெஹான் அகமது, இடது கை ஸ்பின்னர்களான டாம் ஹார்ட்லீ, ஜேக் லீச் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

விசா கிடைக்காத சோயப் பஷீர்:

இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்கான விசா இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவருக்கும் கிடைக்கப்பட நிலையில் சோயப் பஷீருக்கு மட்டும் கிடைக்கவில்லை.  இதனிடையே, கடந்த கடந்த டிசம்பர் மாதமே டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவித்தும் இதுவரை ஒரு குறிப்பிட்ட வீரருக்கு மட்டும் விசா வழங்காதது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார். சமூக வலைதளங்களிலும் விசா வழங்காதது குறித்து இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய அரசு மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில், இந்திய அரசு மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுகள் பற்றி ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ரோகித் சர்மாவின் நச் பதில்:

அதற்கு பதிலளித்த அவர், “சோயப் பஷீருக்காக  நான் வருந்துகிறேன். அநேகமாக அவர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறார் என்று நினைக்கிறேன். ஆனால், அவருக்கு விஷா கொடுப்பதற்கு நான் ஒன்றும் விசா அலுவலகத்தில் அமர்ந்து இருக்கவில்லை. விரைவில் அவர் இந்தியாவுக்கு வருவார் என்று நம்புகிறேன்என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்... விராட் கோலி இல்லாததும் நல்லதுதான்- ராகுல் ட்ராவிட்!

மேலும் படிக்க: India vs England 1st Test: இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்... எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? - விவரம்

 

Continues below advertisement