டெஸ்ட் போட்டி:


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் அங்கமாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. அதன்படி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவுடன் விளையாடுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் கடந்த ஓர் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறது.


இதில் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை இந்திய அணி முன்னதாகவே அறிவித்து விட்டது. அதன்படி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக பிசிசிஐ அறிவித்தது.


கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?


இந்நிலையில், டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக தங்களுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு ஜஸ்ப்ரித் பும்ரா பதிலளித்துள்ளார்.


இது தொடர்பாக பேசிய அவர்டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது எப்பொழுதும் எனக்கு சிறந்த ஒன்று. அதிலும் முக்கியமாக கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவது என்பது மிகவும் அற்புதமான ஒர் உணர்வு. முன்னதாக, நான் கேப்டனாக நியமிக்கப்பட்ட டெஸ்ட் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவி இருந்தாலும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். எந்தவொரு வீரருக்கும் கேப்டன்ஷி செய்வது என்பது விருப்பமான ஒன்றாகத்தான் இருக்கும்.


அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்ஷி வாய்ப்பு கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்? எனக்கு தொடர்ச்சியக டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்ஷி செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியைப் பாருங்கள் வேகப்பந்து வீச்சாளராக இருந்து கொண்டு தான் அந்த அணியை கேப்டன் பொறுப்பில் இருந்து பேட் கம்மின்ஸ் வழிநடத்துகிறார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு என ஒரு புத்திசாலித்தனம் உள்ளது. அவர்கள் கடினமான சூழ்நிலையில் கூட அணியை சிறப்பாக வழி நடத்துவார்கள் என்பது என்னுடைய ஒரு நம்பிக்கைஎன்று ஜஸ்ப்ரித் பும்ரா கூறினார்.


 


மேலும் படிக்க: Rohit Sharma: "வெறும் 156 ரன்கள்தான்" கங்குலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ரோகித் சர்மா! விவரம் உள்ளே!


 


மேலும் படிக்க: India vs England 1st Test: இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்... எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? - விவரம்