இந்திய அணிக்காக 2023 -ல் அனைத்து வகை போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் சுப்மன் கில்.
தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி 20 போட்டிகள் சமநிலை பெற்றது. ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.
அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் 32 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதனிடையே, இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர்:
முன்னதாக, இந்த ஆண்டின் கடைசி நாள் இன்று. அந்த வகையில் நாளை 2024 ஆம் ஆண்டு தொடங்குகிறது. புதிய ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இச்சூழலில், இந்த ஆண்டில் இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசிய வீரர் யார் என்பது தொடர்பான தகவல்களை இங்கே பார்ப்போம்:
உலகக் கோப்பை டெஸ்ட், ஆசிய கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை என இந்த ஆண்டு ஒரு கிரிக்கெட் திருவிழாவே நடந்து முடிந்திருக்கிறது. அதோடு இந்திய அணி வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச போட்டிகளில் விளையாடியது.
சுப்மன் கில் முதலிடம்:
இந்நிலையில், தான் இந்திய அணிக்காக இந்த ஆண்டில் அதிக ரன்களை குவித்த வீரர் யார் (மூன்று வடிவிலும் சேர்த்து) என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதன்படி, 52 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள சுப்மன் கில் மொத்தம் 2154 ரன்களை விளாசியிருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அதன்படி அவர் 2048 ரன்களை 36 இன்னிங்ஸ்களில் விளாசியுள்ளார்.
மேலும் படிக்க: Watch Video: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்... விராட் கோலியை பாராட்டிய ரோகித் சர்மா... இதுதான் காரணமா? வைரல் வீடியோ!
மேலும் படிக்க: Virat Kohli: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை... கிங் கோலி படைத்த மாபெரும் சாதனை...வாழ்த்தும் ரசிகர்கள்!