டெஸ்ட் போட்டிகள்:



பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியில் தான் இந்திய அணி ஆண்டின் தொடக்கத்தில் விளையாடியது. அதன்படி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி  4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றியது. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. மார்ச் மாதம் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை தழுவியதன் மூலமாக இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023:


இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பின்னர், ஜூலை மாதம் இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் சென்றது. இதில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் 1-0 என்று டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.


இதனைத் தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதன்படி, இந்த 9 போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 14 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 785 ரன்கள் எடுத்துள்ளார். 2 சதம் மற்றும் 3 அரைசதம் எடுத்துள்ள அவர் அதிகபட்சமாக 186 ரன்கள் எடுத்துள்ளார். 



இதில், அதிகபட்சமாக 186 ரன்கள் அடங்கும். மேலும், 2 சதமும், 3 அரைசதமும் அடித்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 2ஆவது இடத்தில் இருக்கிறார். அவர் 550 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதன்படி, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் வெவ்வேறு காலண்டர் இயரில் விராட் கோலி 2000 க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.


2012: 2186 ரன்கள்


2014: 2286 ரன்கள்


2016: 2595 ரன்கள்


2017: 2818 ரன்கள்


2018: 2735 ரன்கள்


2019: 2455 ரன்கள்


2023: 2048 ரன்கள்


கிரிக்கெட் வரலாற்றில் 7 வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் 2000க்கும் அதிகமாக ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள விராட் கோலியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.