தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி:


இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி 20 போட்டிகள் சமநிலை பெற்றது. ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. 


இதில், முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி மிக மோசமாக விளையாடியது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஜஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அந்த வகையில் ஜெய்ஸ்வால் 17 ரன்களும், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களும், சுப்மன் கில் 2 ரன்களிலும் நடையைக் கட்டினர். பின்னர் வந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஒரளவு ரன்களை சேர்த்தனர். பின்னர், களம் கண்ட கே.எல்.ராகுல் சதம் விளாசினார். அந்த வகையில், 137 பந்துகள் களத்தில் நின்ற அவர் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என 101 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. 



இதனைத்தொடர்ந்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 408 ரன்களை குவித்தது. இதில், டீன் எல்கர் அதிரடியாக விளையாடி 287 பந்துகள் களத்தில் நின்று 185 ரன்களை குவித்தார். அதேபோல், டேவிட் பெடிங்கம் 56 ரன்களும், மார்க்கோ ஜான்சன் 84 ரன்கள் எடுத்தனர். 


பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸை விட மிக மோசமாக விளையாடினார்கள். இது ரசிகர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது.அந்த வகையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 131 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அதேபோல், 32 ரன்கள் வித்தியாத்தில் இன்னிங்ஸ் தோல்வியையும் பெற்றது இந்திய அணி.


தட்டிக்கொடுத்த ரோகித் சர்மா:


அதேநேரம், இந்த போட்டியில் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் விக்கெட்டுகளை பறிகொடுக்க இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நிதனாமாக விளையாடினார். அதன்படி, சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 82 பந்துகள் களத்தில் நின்று 76 ரன்களை சேர்த்தார். 131 ரன்களில் இந்திய அணிக்கு 76 ரன்களை விராட் கோலி தான் எடுத்துக் கொடுத்தார்.






இதனிடையே 76 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பிய விராட் கோலியை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தோள்பட்டையில் தட்டுக்கொடுத்து வரவேற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.