ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி தரவரிசை:


 


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணி வீராங்கனை நடாலி ஸ்கிவர்-பிரண்ட் 807 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இலங்கை வீராங்கனை சாமரி அடப்பாட்டு 736 புள்ளிகளுடனும், 717 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி உள்ளார்.


 


நான்காவது இடத்திற்கு முன்னேறிய மந்தனா:


இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டு இடங்கள் முன்னேறி 696 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 689 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.


மற்றொரு இந்திய வீராங்கனையான ஹர்மன்ப்ரீ கவுர் 639 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தில் இருக்கிறார். ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் 746 புள்ளிகளை பெற்றி முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் 677 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் 675 புள்ளி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 654 புள்ளிகளுடன ஒரு இடம் சரிந்து நான்காவது இடத்தில் உள்ளார்.






பந்துவீச்சாளர்கள் தரவரிசை:


பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தீப்தி சர்மாவை தவிர முதல் 10 இடங்களில் வேறு எந்த இந்திய  வீராங்கனையும் இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் 452 புள்ளிகளுடன முதல் இடத்திலும், இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் 360 புள்ளிகளை பெற்று இரண்டாவத இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் 358 புள்ளிகளுடன் மூன்றாம்  இடத்திலும், நியூசிலாந்தின் அமெலியா கெர் 347 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா 345 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.


 


மேலும் படிக்க: Jasprit Bumrah: கிண்டல் செய்த நபர்.. பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் கொடுத்த பதிலடி!


 


மேலும் படிக்க: MS Dhoni: என்னா மனுஷன்யா...சிறுவயது நட்பை மறக்காமல் தோனி செய்த செயல்!