ஐபிஎல் 2024:


ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டு 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகளில் கேப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண இருக்கிறது.


இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் பலமான அணிகளாக பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு நிகராக குஜராத் டைட்டன்ஸ் அணியும் திகழ்கிறது. அதற்கான காரணம் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகமான வருடத்திலேயே அந்த அணி கேப்பையை வென்று அசத்தியது. அதேபோல், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் இறுதிப்போட்டி வரை சென்றது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. இச்சூழலில் தான் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை  இந்த சீசனுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. இதனால் குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


விஜய் சங்கரால் முடியும்:


இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கரால் நிரப்ப முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் இரண்டு வருடங்களாக விளையாடி வரும் விஜய் சங்கர் அவரிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றிருப்பார். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் கடினமான நேரங்களில் எப்படி பந்துவீச வேண்டும், எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்பதையும் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து கற்றுக்கொண்டிருப்பார்.


விஜய் சங்கர் 80 அல்லது 90 சதவீத தாக்கத்தை கொடுத்தாலே போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் விஜய் சங்கரால் அவரின் இடத்தை நிரப்ப முடியும்என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.


மேலும் படிக்க: Watch Video: கிரிக்கெட்டில் கலக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுட்டிக் குழந்தை ஹ்யூகோ! வைரல் வீடியோ!


மேலும் படிக்க: MS Dhoni: என்னா மனுஷன்யா...சிறுவயது நட்பை மறக்காமல் தோனி செய்த செயல்!