எம்.எஸ்.தோனி:
இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச ஒரு நாள் உலககோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பைகளை வென்றுகொடுத்தவர் எம்.எஸ்.தோனி. கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார். இதனிடையே இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாட இருக்கும் தோனி பல்வேறு விதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
கையெழுத்திட்ட பேட்டை பரிசாக வழங்கினார்:
இந்நிலையில், கிரிக்கெட் வாழ்வில் ஆரம்பகாலகட்டத்தில் தனக்கு பேட் ஸ்பான்சர் செய்த பால்யகால நண்பரான பரம்ஜித் சிங்கிற்கு கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் எம்.எஸ்.தோனி. அண்மையில் பேட்டிங் பயிற்சி செய்த தோனி 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டை வைத்துத்தான் பயிற்சியை மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. முன்னதாக, தோனிக்கு சிறுவயதில் பேட் ஸ்பான்சர் செய்தது பரம்ஜித் சிங்தான் என்பது 'எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தின் மூலம் காட்டப்பட்டிருக்கும். இதனிடையே எம்.எஸ்.தோனி தான் வந்த வழியை மறக்காமல் இருக்கிறார் என்பது போன்ற கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்தனர்.
நம்பர் 1 நட்பு:
இதனிடையே, எம்.எஸ்.தோனி தான் கையெப்பம் இட்ட பேட் ஒன்றை பரம்ஜித் சிங்கிற்கு பரிசாக வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த வகையில், "வாழ்த்துக்கள் சோட்டு பையா”என்று பரிசாக வழங்கிய அந்த பேட்டில் எழுதியுள்ளார். இதனிடையே, தோனியிடம் பேட்டை பரிசாக பெற்ற பரம்ஜித் சிங் பேசுகையில், “நான் தோனியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். தோனி எப்போதும் எங்களுக்காக இருக்கிறார். இது தான் எங்கள் நட்பு. நம்பர் 1 நட்பு எங்களுடையது” என்று கூறியுள்ளார்.
இச்சூழலில் 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டை வைத்து தோனி பயிற்சி மேற்கொண்டது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ் பேசியுள்ளார். அதில்,”நெட்ஸில் எம்.எஸ்.தோனி சில பந்துகளை அடிப்பதை நான் பார்த்தேன். அவரது பேட்டில் புதிய பேட் ஸ்டிக்கர் உள்ளது. அவரது பள்ளித் தோழர் ஒருவரின் உள்ளூர் விளையாட்டுக் கடை விற்பனையை அதிகரிக்க உங்கள் பேட்டில் நிறுவனத்தின் பெயரை ஒட்டவும்”என்று கூறினார்.
மேலும் படிக்க: Watch Video: கிரிக்கெட்டில் கலக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுட்டிக் குழந்தை ஹ்யூகோ! வைரல் வீடியோ!
மேலும் படிக்க: Saurabh Tiwary: சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கலக்கிய செளரப் திவாரி