ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக தொடங்கியது. அந்தவகையில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் இரண்டாவது வாரமாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக, நேற்று (அக்டோபர் 9) நடைபெற்ற 6 வது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 99 ரன்கள் வித்தியாத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இச்சூழலில், இன்று (அக்டோபர் 10 ) ஆம் தேதி இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்று வரும் போட்டியில் நடப்பு உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்து அணியும், வங்கதேச அணியும் மோதி வருகின்றனர். அதேபோல், ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் தோல்வி அடைந்த இலங்கை அணியும் , வெற்றி முனைப்பில் பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகின்றனர்.
இச்சூழலில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாத்தும் நிஸ்ஸங்கா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர்.
அப்போது, குசல் பெரேரா டக் அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் பாத்தும் நிஸ்ஸங்க களத்தில் நின்றார். அவருடன் ஜோடி சேர்ந்தார் இலங்கை அணியின்அதிரடி ஆட்டக்காரர் குசல் மெண்டிஸ்.
அதிரடி சதம் அடித்த மெண்டிஸ்:
5 ரன்களுக்கு 1 விக்கெட் இருந்த போது சேர்ந்த இவர்களது பார்ட்னர்ஷிப்பை பிரிக்க பாகிஸ்தான் அணிக்கு 17. 2 ஓவர்கள் தேவை பட்டது. அந்த வகையில் இருவருமே அதிரடியாக விளையாடினர். அதில், பாத்தும் நிஸ்ஸங்க 61 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸ்ர் உட்பட மொத்தம் 51 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
மறுபுறம் தனது அதிரடி ஆட்டாத்தால் பாகிஸ்தான் வீரர்களின் பந்துகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்தார் இலங்கை வீரர் குசல் மெண்டிஸ்.
அந்த வகையில் 77 பந்துகளில் குசல் மெண்டிஸ் 14 பவுண்டரிகளையும் 6 சிக்ஸர்களையும் பறக்க விட்டு மொத்தம் 122 ரன்கள் எடுத்தார். முன்னதாக, 65 பந்துகளில் சிக்ஸர் மூலம் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அப்போது மைதானத்தில் கூடி இருந்த ரசிகர்கள் ஆரவரம் செய்தனர். பின்னர், பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹசன் அலி வீசிய பந்தில் இமாம்-உல்-ஹக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
முன்னதாக, தென் ஆப்பரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மெண்டிஸ் வெறும் 42 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 76 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில், தற்போது சதீர சமரவிக்ரமா மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதனிடையே, இலங்கை அணி 34 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்களுடன் விளையாடி வருகிறது.
மேலும் படிக்க: Shubman Gill: மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ்.. சரிந்த பிளேட் செல்ஸ் - பாகிஸ்தான் போட்டியில் மாற்று வீரர்?
மேலும் படிக்க: NZ vs NED LIVE Score: 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்