ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பை தொடங்கியவுடன், முன்பு நடந்த உலகக் கோப்பையின் பழைய நினைவுகளை பலரும் வெளிப்படுத்தி வருகின்றன. 


இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், உலகக் கோப்பை 2011 குறித்தும், சுரேஷ் ரெய்னா குறித்தும் பேசினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






அந்த வீடியோவில் பேசிய அஸ்வின், 2011 உலகக் கோப்பை இந்திய அணி அரையிறுதி மற்றும் காலிறுதி போட்டியில் தடுமாறியது. சுரேஷ் ரெய்னா வந்தார் போட்டியை வேறு மாதிரி மாற்றுவிட்டு சென்றுவிட்டார். 2011 உலகக் கோப்பை வெல்ல காரணமானவர்கள் யார் என்று கேட்டால், நிறைய பேர் யுவராஜ் சிங், கௌதம் காம்பீர், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் பற்றி சொல்வார்கள். ஆனால், நாம் எல்லாரும் சுரேஷ் ரெய்னாவின் பங்கை பற்றி மறந்துவிட்டோம்” என்றார். 


2011 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 34 ரன்களும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 36 ரன்களும் எடுத்திருந்தார். 


ரெய்னாவின் 2011 உலகக் கோப்பை பயணத்தின் தனித்துவமான தருணங்களில் ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின் போது யுவராஜ் சிங்குடன் இணைந்து 74 ரன்கள் எடுத்தார். 


முன்னதாக, உலகக் கோப்பை குறித்து பேசிய ரெய்னா, “ 2011 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது. அப்போது, அந்த அழுத்ததை குறைக்க பார்டர் படத்தின் பாடல்களை கேட்டேன்” என கூறினார். 






தொடர்ந்து பேசிய அவர், ”இந்தியா சொந்த மண்ணில் விளையாடும் போது, ​​எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அந்த அணி நிலைமையை சமாளித்து முயற்சி செய்து விளையாட வேண்டும். 2011 இல் இங்கு உலகக் கோப்பையை வென்றோம், 2015 இல் ஆஸ்திரேலியாவில் கோப்பையை வென்றது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து சொந்த மண்ணில் வென்றது. இந்தியா தனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் உலகக் கோப்பையை மீண்டும் வெல்ல இங்கே ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. அவர்களால் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.


2011-ல் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து அந்த அணி உலக சாம்பியனாகியது. இந்திய அணி இரண்டாவது முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது, இதற்கு முன் 1983ல் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்தியது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது, ​​ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாட்டத்தில் மூழ்கியது. ​​இந்திய அணி வீரர்களின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.