NZ vs NED LIVE Score: 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்
NZ vs NED Live Score Updates: 2023 உலகக் கோப்பையின் ஆறாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து இடையேயான போட்டி குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
323 ரன்கள் நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் சேர்த்தது. இதனால் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வி வித்தியாசத்தினை குறைக்க போராடி வருகிறது.
அரைசதம் கடந்து சிறப்பாகவும் பொறுப்பாகவு விளையாடி வந்த நெதர்லாந்து அணியின் கேப்டன் அக்ரீமன் தனது விக்கெட்டினை 69 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
31 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது நெதர்லாந்து அணி
நெதர்லாந்து அணியின் கேப்டன் அக்ரீமன் தனது அரைசதத்தினை எட்டி சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகிறார்.
போட்டியின் 17வது ஓவரில் லீட் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். லீட் சிக்ஸருக்கு அடித்த பந்தை போல்ட் மிகவும் அட்டகாசமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.
நெதர்லாந்து அணி தனது இரண்டாவது விக்கெட்டினை 11ஓவரில் 43 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்துள்ளது.
நெதர்லாந்து அணி தனது முதல் விக்கெட்டினை போட்டியின் 6வது ஓவரின் இறுதிப் பந்தில் இழந்தது. பொறுமையாக விளையாடி வந்த விக்ரமஜித் சிங் தனது விக்கெட்டினை மேட் ஹென்றி பந்தில் இழந்து 12 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலககுடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் இன்னிங்ஸை விக்ரம்ஜித் சிங் மற்றும் ஓடோவிட் தொடங்கியுள்ளனர்.
50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் சேர்த்துள்ளது. நெதர்லாந்து அணி 323 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
250 ரன்களைக் கடந்து சிறப்பாக விளையாடி வரும் நியூசிலாந்து அணி தனது 6வது விக்கெட்டினை 45வது ஓவரின் முதல் பந்தில் இழந்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் நியூசிலாந்து அணி 43வது ஓவரில் 5 விக்கெட்டினை இழந்து 250 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த மிட்ஷெல் 48 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறியுள்ளார். நியூசிலாந்து அணி 41 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 246 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி தனது மூன்றாவது விக்கெட்டினை இழந்துள்ளது. போட்டியின் 33வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரை அடுத்து 5வது வீரராக டாம் லாதம் களமிறங்கியுள்ளார். ரச்சின் ரவீந்திரா அரைசதம் கடந்து தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.
நியூசிலாந்து அணி போட்டியின் 27வது ஓவரில் தனது 2வது விக்கெட்டினை இழந்துள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணி தனது இரண்டாவது விக்கெட்டினை இழப்பது இதுதான் முதல் முறை ஆகும். முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
25 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 135 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 100 ரன்கள் சேர்த்து சீராக ரன்கள் சேர்த்து வருகிறது.
நியூசிலாந்து அணி 17 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 90 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே தனது விக்கெட்டினை 40 பந்தில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் சேர்த்து வருகிறது.
5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்துள்ளது.
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மன், பாஸ் டி லீட், தேஜா நிடமனூரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ரியான் க்ளீன், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்
நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
2023 உலகக் கோப்பையின் ஆறாவது போட்டி நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து இடையே நடைபெறுகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தை நியூசிலாந்து மோசமாக வீழ்த்தியது. அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்து தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் போட்டியிலும் நெதர்லாந்து வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமல்ல. இங்கிலாந்துக்கு எதிராக டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களால் நெதர்லாந்தையும் வீழ்த்த முடியும். நெதர்லாந்தின் பந்துவீச்சு பயனுள்ளதாக இருக்கும். இந்த போட்டியில் விளையாடும் பதினொன்றில் எந்த மாற்றமும் இருக்காது.
நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் கேன் வில்லியம்சன் முதல் போட்டியில் விளையாடவில்லை. இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. நியூசிலாந்து அணி விளையாடும் பதினொன்றில் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்புவதில்லை என்று தெரிகிறது. வில் யங் மற்றும் டெவோன் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கலாம். அதேசமயம் ரச்சின் ரவீந்திரா 3வது இடத்தில் பேட் செய்ய வருவார். பந்துவீச்சில் டிரென்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர் மற்றும் மாட் ஹென்றி ஆகியோரை அணி களமிறக்கலாம்.
நெதர்லாந்து அணி விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ'டவுட் ஆகியோருக்கு தொடக்க வாய்ப்பை வழங்க முடியும். கடந்த போட்டியில் பாஸ் டி லீட் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். அவர் 68 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்தார். இதன் போது 6 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன. பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லீடே 9 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்துக்கு எதிரான அணிக்கு அவர் முக்கியமானவர் என்பதை நிரூபிக்க முடியும். பாகிஸ்தானுக்கு எதிராக விக்ரம்ஜித் சிங் அரைசதம் அடித்திருந்தார். அவர் 67 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்தார். இம்முறையும் அணிக்கு அவரிடமிருந்து எதிர்பார்ப்பு இருக்கும்.
நியூசிலாந்து-நெதர்லாந்து போட்டிக்கான சாத்தியமான வீரர்கள் -
நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன்/ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமானுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -