உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று தரம்சாலாவில் நடைபெற்று வரும் 7வது லீக் போட்டியில் வங்கதேசம் – இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.


இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து,இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியது. பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பார்ஸ்டோ – டேவிட் மலான் அதிரடியான தொடக்கம் அளித்தனர்.


டேவிட் மலான் சதம்:


பார்ஸ்டோ நிதானமாக ஆட டேவிட் மலான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினர். இவர்கள் இருவரையும் பிரிக்க வங்கதேச பவுலர்கள் முயன்றனர். நிதானமாக ஆடிய பார்ஸ்டோ அரைசதம் அடித்த நிலையில் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்தில் போல்டானார். அவர் 59 பந்துகளில் 8 பவுண்டரி அடித்த நிலையில் 5 ரன்களுக்கு அவுட்டானர்.


அவர் ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த ஜோ ரூட்டுடன் சேர்ந்த டேவிட் மலான் தன்னுடைய அதிரடியை தொடர்ந்தார். மறுமுனையில் ஜோ ரூட் மிக நேர்த்தியாக ஆடினர். சிறப்பாக ஆடிய டேவிட் மலான் சதம் விளாசினார். சதம் கடந்தும் அதிரடி காட்டிய அவரை மெஹிதி ஹாசன் அவுட்டாக்கினார். அவர் 107 பந்துகளில் 16 பவுண்டரி 5 சிக்ஸருடன் 140 ரன்களுக்கு அவுட்டானார்.


365 ரன்கள் டார்கெட்:


அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கேப்டன் ஜோஸ் பட்லர் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 68 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த ஹாரி ப்ரூக் 20 ரன்களிலும், லிவிங்ஸ்டன் டக் அவுட்டும் ஆக கடைசியில் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


இதனால், 41.5 ஓவர்களில் 307 ரன்களை எடுத்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களுக்கு 364 ரன்களை குவித்தது. வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிஷூகுர் ரஹ்மான் 10 ஓவர்களில் 70 ரன்களையும், ஷோரிபுல் இஸ்லாம் 10 ஓவர்களில் 75 ரன்களையும் வாரி வழங்கினர். மெஹிதி ஹாசன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை பெற்ற வங்கதேச அணி இமாலய இலக்கை எட்டி 2வது வெற்றி பெறுமா? அல்லது நியூசிலாந்துக்கு எதிராக தோற்ற இங்கிலாந்து வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கலாம். 


இங்கிலாந்து அணியில் டோப்ளே, மார்க்வுட், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், ரஷீத் லிவிங்ஸ்டன் ஆகிய பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்களை சமாளித்து இலக்கை எட்டுவது வங்தேச அணிக்கு சவாலான ஒன்றாகும்.


வங்கதேச அணியின் லிட்டன் தாஸ், தன்சித் ஹாசன், ஷான்டோ, மெஹிதி ஹாசன், ஷகிப், விக்கெட் கீப்பர் ரஹீம் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.  


மேலும் படிக்க: Suresh Raina: ’2011 உலகக் கோப்பை இவர் இல்லேன்னா சாத்தியமில்லை’... சின்ன ’தல’ பற்றி பேசிய ரவிசந்திரன் அஸ்வின்!


மேலும் படிக்க: Shubman Gill: மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ்.. சரிந்த பிளேட் செல்ஸ் - பாகிஸ்தான் போட்டியில் மாற்று வீரர்?