இந்தியா - இலங்கை:


இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இதில், முதல் டி20 போட்டி ஜூலை 27 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் முதல் ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.


கொழும்பு மைதானத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கோலி:


இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர். பிரமேதாச மைதானத்தி ல் தான் விளையாடப்பட உள்ளது. இதற்கு முன்னதாக கொழும்புவில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தான் விளையாடிய கடைசி 5 இன்னிங்ஸ்களில் 4 சதம் விளாசி இருக்கிறார்.






2008 முதல் இந்த மைதானத்தில் 11 ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி விளையாடி உள்ளார். அதன்படி 10 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள இவர் 107.33 என்ற சராசரியில் 644 ரன்கள் விளாசி இருக்கிறார். அதாவது இதில் கடந்து 5 போட்டிகளில் 4 சதம் விளாசி உள்ளார். முதல் போட்டியில் 128 ரன்களும், இரண்டாவது போட்டியில் 131 ரன்களும், மூன்றாவது போட்டியில் 110 ரன்களும் எடுத்தார்.


5 வது இன்னிங்ஸில் 3 ரன்களில் வெளியேறினார். இப்படி கொழும்புவில் தான் கடைசியாக விளையாடிய போட்டிகளில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இச்சூழலில் தான் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளயாட உள்ளது. இதானல் விராட் கோலி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:


ரோஹித் ஷர்மா (C), சுப்மான் கில் (VC), விராட் கோலி, கேஎல் ராகுல் (WK), ரிஷப் பந்த் (WK), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா


டி20 போட்டிக்கான இந்திய அணி:


சூர்யகுமார் யாதவ் (C), சுப்மன் கில் (VC), யஷஹ்வி ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், ரியான் பிராக், ரிஷப் பண்ட் (WK), சஞ்சு சாம்ச்ன (WK), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது.