மகளிர் ஆசிய கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடர் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்தி வரும் இநு்திய அணி இன்று ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்காக ஷபாலி வர்மா – ஸ்மிரிதி மந்தனா இருவரும் களமிறங்கினர்.
கலக்கிய ஹர்மன்ப்ரீத்:
ஷபாலி வர்மா களமிறங்கியது முதலே பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 13 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அதிரடி காட்டிய ஷபாலியும் 18 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹேமலதா 2 ரன்களில் அவுட்டானார்.
அடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் குமார் களமிறங்கினார். அவர் நிதானமாக ஆட்டத்தை தொடங்கி, அதிரடியாக ஆடினார். பவுண்டரிகளாகவும், சிக்ஸராகவும் விளாசினார். அவர் அரைசதம் விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த ரோட்ரிக்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
கொளுத்திய ரிச்சா கோஷ்:
அவர் பவுண்டரிகளாகவும், சிக்ஸராகவும் விளாசினார். இதனால், இந்திய அணியின் ரன்ரேட் ஜெட் வேகத்தில் எகிறியது. மறுமுனையில் அதிரடி காட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர் 47 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை பட்டாசாய் கொளுத்திய ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்ஸருடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தது.
202 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு ஈஷா- தீர்த்தா ஜோடி களமிறங்கினர். இந்திய அணியிவ் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசியதால் அவர்களால் ரன்கள் எடுக்க முடியவில்லை. தீர்த்தா சதீஷ் 4 ரன்களுக்கும், ரினிதா ரஜித் 7 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சமைரா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தியா வெற்றி:
ஐக்கிய அரபு அணிக்காக தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஈஷா ரோகித் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கவிஷா அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். ஆனால், அடுத்து வந்த குஷி, ஹீனா அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால், 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக ஆடியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.