மூத்த ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசனை ஒருநாள் சர்வதேச (ODI) அணிக்கு புதிய கேப்டனாக நியமித்து வங்காளதேச கிரிக்கெட் வாரியம் (BCB) இன்று ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளது.


புதிய கேப்டனாக ஷகிப்


வரவிருக்கும் ஆசிய கோப்பை மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை முன்னிட்டு இந்த மாற்றம் வங்கதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகி ஆசிய கோப்பையில் இருந்து விலகிய தமிம் இக்பாலிடம் இருந்து ஷாகிப் அல் ஹசன் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.



மூன்று வடிவங்களிலும் கேப்டன்


ஷகிப் கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை வழிநடத்தினார். தற்போது சமீபத்திய முன்னேற்றத்திற்கு பின், அவர் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக மாறியுள்ளார். கடந்த ஆண்டு முதல் வங்கதேச அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டனாக இருந்து வருவது குறிபபிடத்தக்கது. வங்கதேசத்திற்கான கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் கேப்டனாக ஆனது, ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட் வாழ்வில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: IND Vs WI 4th T20: தொடரை வெல்லுமா மேற்கிந்திய தீவுகள்..? சவால் அளிக்குமா இந்தியா..? இன்று 4வது டி20 மோதல்..!


கேப்டனாக செய்த சாதனைகள்


அவர் கடைசியாக மே 12, 2017 அன்று மலாஹைடில் அயர்லாந்திற்கு எதிராக வங்காளதேசத்தின் ODI கேப்டனாக விளையாடினார். கேப்டனாக ஷகிப் வங்காளதேசத்தை 49 ODIகள், 19 டெஸ்ட் மற்றும் 39 T20I போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி, ஆகஸ்ட் 31 அன்று இலங்கையில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மோதலின் மூலம் ஆசிய கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியை தொடங்க உள்ளனர்.



உலகக்கோப்பையில் முதல் போட்டி


இந்த போட்டிகளை கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், அனைவரின் பார்வையும் ஷகிப் அல் ஹசன் மற்றும் அவரது அணியினர் மீதும் படர்ந்துள்ளது. அவர்கள் தங்கள் கிரிக்கெட் பயணத்தில் இந்த புதிய அத்தியாயத்தை தொடங்குவார்கள் என பலரும் எதிர்பார்க்கின்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 12 தேதி தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியை வங்கதேசம் சென்னையில், அக்டோபர் 13 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் பல அணிகளுக்கு சவால் கொடுக்கும் அணியாக வங்கதேச அணி வரும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் கணிக்கின்றனர்.