பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வெற்றிக்கு காரணமாக இருந்த பும்ராவை அவரது மனைவி சஞ்சனா கணேசன் பேட்டி எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி:
ஐசிசி டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 3 ஆம் தேதி தொடங்கியது. அதன்படி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் A வில் இந்தியா, அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. உலகக் கோப்பை ஒருநாள் போட்டிக்கு பிறகு இரு அணிகளும் நேரடியாக மோதியதால் இந்த போட்டியில் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி பாகிஸ்தான் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி.
அதன்படி தற்போது குரூப் A புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணாமாக அமைந்தது ஜஸ்ப்ரித் பும்ராவின் அசத்தலான பந்து வீச்சு தான். அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரும் சூழலில் அவருடைய மனைவியும், கிரிக்கெட் தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன் பேட்டி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மனைவிக்கு புன்னகை பொங்க பதிலளித்த பும்ரா:
எப்படி நீங்கள் உங்களது பந்து வீச்சை மகிழ்ச்சியோடு வீசினீர்கள்? அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறீர்கள். கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நீங்கள் விளையாடவில்லை. ஆனால், இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி வருகிறீர்கள். முகமது ரிஸ்வானின் விக்கெட் தான் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
டின்னர் எங்கே?
ரிஸ்வானை ஆட்டமிழக்கச் செய்தது எப்படி? நியூயார்க் மைதானம் எப்படி இருக்கிறது என்பது போன்று பல கேள்விகளை எழுப்பினர்.
பேட்டி முடிந்ததும், பும்ராவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சஞ்சனா கணேசன், "மிக விரைவில் மீண்டும் சந்திப்போம்" என்று கூறினார். அதற்கு பதிலளித்த பும்ரா, "நான் உங்களை இன்னும் 30 நிமிடங்களில் சந்திப்பேன்." என்றார். அப்போது சஞ்சனா, டின்னர் எங்கே என்று முடிவுடன் இருங்கள்” என்று பதில் அளித்தது ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் படிக்க: Sandeep Lamichhane: விசா வழங்காத அமெரிக்கா..வெஸ்ட் இண்டீஸிற்கு விளையாடச் செல்லும் சந்தீப் லாமிச்சானே!
மேலும் படிக்க: Anniyur siva profile: விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா - யார் இவர்..? - முழு பின்னணி இதோ