பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது விளையாட்டை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு சம்பளத்தை அதிகமாக வழங்குவதாக கூறியது. ஆனல் அவர்கள் சமூக வலைதளங்களில் புதிய புகைப்படங்களை வெளியிடுகிறார்களே தவிர வேறு எதையும் செய்வதில்லை என்று பாகிஸ்தான் அணி வீரர் அஹ்மத் ஷெசாத் கூறியுள்ளார்.
தொடர் தோல்வியில் பாகிஸ்தான் அணி:
ஐசிசி டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 3 ஆம் தேதி தொடங்கியது. அதன்படி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் A வில் இந்தியா, அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் அமெரிக்க அணி உள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்தது.
அதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் பாகிஸ்தான் படுதோல்வியை தழுவியது. அதேபோல் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்த. இதனால் பல்வேறு தரப்புகளிலும் இருந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான விமசர்னங்கள் எழுந்தன.
பாபர் அசாமை விமர்சித்த பாகிஸ்தான் வீரர்:
இந்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர் அஹ்மத் ஷெசாத் பாபர் அசாமை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,”பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது விளையாட்டை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு சம்பளத்தை அதிகமாக வழங்குவதாக கூறியது. ஆனல் அவர்கள் சமூக வலைதளங்களில் புதிய புகைப்படங்களை வெளியிடுகிறார்களே தவிர வேறு எதையும் செய்வதில்லை.
பாபர் அசாம் விளையாடிய பெரிய போட்டிகளில் அவரது புள்ளிவிவரங்கள், சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றைப் பாருங்கள். அவர் எப்படிப்பட்ட ராஜா என்பது புரியும். நீங்கள் அதிக ரன்களை எடுத்து இருக்கலாம் ஆனால் நீங்கள் தோல்வி அடைந்து உள்ளீர்கள்” என்று பாபர் அசாமை நேரடியாக தாக்கி பேசியுள்ளார் அஹ்மத் ஷெசாத். அதேநேரம் இன்று (ஜூன் 11) நடைபெறும் உலகக் கோப்பை டி20 போட்டியின் 22 வது போட்டியில் பாகிஸ்தான் அணி கனடாவை எதிர்கொண்டு விளையாட உள்ளது.
மேலும் படிக்க: Sandeep Lamichhane: விசா வழங்காத அமெரிக்கா..வெஸ்ட் இண்டீஸிற்கு விளையாடச் செல்லும் சந்தீப் லாமிச்சானே!
மேலும் படிக்க: Anniyur siva profile: விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா - யார் இவர்..? - முழு பின்னணி இதோ