நடிகையை திருமணம் செய்த சோயப் மாலிக்:


இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் துபாயில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இச்சூழலில் தான் சானியா மிர்சா சமீப காலமாக தனது கணவரிடம் இருந்து விலகி இருந்தார். இதனிடையே இவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. அதேநேரம் இருவரும் அதைப் பற்றி எந்த கருத்துகளையும் கூறவில்லை.


முன்னதாக, கடந்த ஆண்டு இருவரும் தங்களது மகனின் பிறந்த நாளை சேர்ந்தே கொண்டாடினார்கள். ஆனால் அப்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகவில்லை.


இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் சோயப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிட்டு இருந்ததை மாற்றி அமைத்தார். சமீபத்தில் சானியா மிர்சா சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். அது அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றிருப்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியது. மற்றொருபுறம் பிரபல பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்துடன் சோயப் மாலிக்கிற்கு நட்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.இந்நிலையில் தான் சோயப் மாலிக் சனா ஜவேத்தை நேற்று திருமணம் செய்து கொண்டார்.


காவலையில் சானியா மிர்சா:


இந்நிலையில், சோயப் மாலிக் திருமணத்தின் போது அவருடைய குடும்ப உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் திருமணம் மீறிய உறவில் சோயப் மாலிக் இருந்தது சானியா மிர்சாவை கவலையடையச் செய்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.






இது தொடர்பாக வெளியான தகவலின் படி, சோயப் மாலிக் மூன்றாவதாக செய்துள்ள இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், சானியா மிர்சாவை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருப்பது சோயப் மாலிக்கின் சகோதரிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சானியா மிர்சா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “உங்கள் இதயத்தின் அமைதியை ஏதாவது தொந்தரவு செய்தால், அதை விடுங்கள்என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Shoaib Malik: சானியா மிர்சாவுடன் விவாகரத்து - இளம் நடிகையை மணந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்


 


மேலும் படிக்க: Watch Video: அறிமுக வீரர் ஷமர் ஜோசப்பின் அதிவேக பவுன்சர்.. ஆஸ்திரேலிய வீரர் கவாஜாவின் தாடையை உடைத்த சோகம்!