இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் தன் மகனுக்கு எப்போதும் பயிற்சியளிப்பதில்லை என்று கூறியுள்ளார்.


கடந்த 1996 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானவர் ராகுல் ட்ராவிட். அதன்படி, 2012 ஆம் ஆண்டு வரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதேபோல், 344 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 13288 ரன்களை குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 10899 ரன்கள் எடுத்துள்ளார். அதன்படி, டெஸ்ட் போட்டிகளில் 5 இரட்டைச் சதம் 36 சதம் மற்றும் 63 அரைசதம் விளாசியுள்ளார். ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரை  12 சதம் மற்றும் 83 அரைசதங்களை விளாசியிருக்கிறார்.


இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட்டில் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். 


கூச் பெஹார் ட்ராபி:


இச்சூழலில், அவரது மகனான சமித் ட்ராவிட் 18 வயதை எட்டியுள்ள வேளையில் தற்போது கர்நாடக அணிக்காக கூச் பெஹர் டிராபியில் விளையாடி வருகிறார். அதன்படி, இந்த தொடரில் கர்நாடக அணியை இறுதிபோட்டி வரை அழைத்து சென்றதில் சமித் ட்ராவிட் முக்கிய பங்காற்றினார். இவ்வாறாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் கலக்கி வருகிறார். இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 அரைசதங்களுடன் 370 ரன்கள் குவித்துள்ளார்.






 


அதோடு பந்துவீச்சிலும் மூன்று விக்கெடுகளை கைப்பற்றி இருக்கிறார். இப்படி ஆல்ரவுண்டாக வளர்ந்து வரும் தனது மகன் சமித் ட்ராவிட்டுக்கு நான் எப்போதுமே பயிற்சி அளிக்க மாட்டேன் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.


பயிற்சியளிக்க மாட்டேன்:


இது தொடர்பாக பேசிய அவர்ம்நான் எப்போதுமே என் மகனுக்கு பயிற்சி அளிப்பது கிடையாது. ஏனெனில் ஒரு பெற்றோராகவும் மற்றும் பயிற்சியாளராகவும் இருப்பது கடினம். அதன் காரணமாகவே நான் அவருக்கு பயிற்சி அளிப்பதில்லை. நான் சமித்திற்கு ஒரு தந்தையாக இருப்பதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். அதனைத் தாண்டி ஒரு பயிற்சியாளராக என்னால் அவருக்கு எப்படி உதவ முடியும் என்று தெரியவில்லைநான் அவருக்கு நல்ல ஒரு தந்தையாகவே இருக்க விருப்பப்படுகிறேன்என கூறியுள்ளார்.


 


 


மேலும் படிக்க: IND vs AFG 2nd T20I: இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடருமா? தொடரில் நீடிக்க என்ன செய்யப்போகிறது ஆப்கானிஸ்தான்?


 


மேலும் படிக்க: Ind vs Eng Test: கிரிக்கெட் பேட் வாங்க கூட கடன்தான் வாங்குனோம்... இந்திய டெஸ்ட் அணியில் தேர்வான துருவ் ஜூரல் உருக்கம்!