எதிரணியை மிரட்டிய சென்னை அணி வீரர்:


ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அணி வீரர் சமீர் ரிஸ்வி பேய் ஃபார்மில் இருப்பது சென்னை அணி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. 17- வது ஐபிஎல் தொடர் வருகிற  மார்ச் 22-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன.


மேலும் ஐபிஎல் 17வது சீசனுக்கான மினி ஏலமும் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உத்தர பிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வியை 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். வலது கை ரெய்னா என்று செல்லமாக அழைக்கப்படும் ரிஸ்வி, எப்படி சுரேஷ் ரெய்னா தனது இடது கை பேட்டிங்கின் மூலம் பந்துகளை சிதறடிப்பாரோ, அதே போலத்தான் இவரும் தனது வலது கை பேட்டிங்கின் மூலமாக  எதிரணியின் பந்துகளை பின்னி எடுப்பார்.


முச்சதம் அடித்த சமீர் ரிஸ்வி:


ஆனால் முதல் தர போட்டிகளில் பெரிய அளவு அனுபவம் இல்லாத ரிஸ்வியை சென்னை அணி எதற்காக இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தார்கள் என்று விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடி ஆக்கும் விதமாக உள்ளூர் டெஸ்ட் போட்டி தொடரான சிகே நாயுடு கோப்பையில் செளராஷ்டிரா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் முச்சதம் அடித்து அசத்தி இருக்கிறார் 23 வயதான சமீர் ரிஸ்வி. கான்பூர் கீரின் பார்க் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் உத்தர பிரதேசம் அணிக்காக ஆடிய ரிஸ்வி 32 பவுண்டரி, 11 சிக்சர்கள் என 261 பந்துகளில் அதிரடியாக ஆடி தனது முதல் முச்சதத்தை பதிவு செய்திருக்கிறார் சமீர் ரிஸ்வி.


ஏற்கெனவே சென்னை அணியில் டெவன் கான்வே, சிவம் துபே, டேரில் மிட்சேல், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயத்தால் அவதிப்படும் நிலையில் ரிஸ்வியின் இந்த ஆட்டம் சென்னை அணியின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் 2023  சீசனுடன் ஓய்வுபெற்ற அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக தான் சிஎஸ்கே அணியில் ரிஸ்வியை எடுத்திருந்தனர். ஆனால் ராயுடுவின் இடத்தை  ரிஸ்வி  முழுமையாக பூர்த்தி செய்வாரா என்ற சந்தேகம் எழுந்திருந்த நிலையில் அவரது இந்த ஆட்டம் சென்னை அணி நிர்வாகம் மற்றும் சிஎஸ்கே  ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!