டெஸ்ட் தொடர்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇதனிடையேஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை  வென்றுள்ளது. அந்தவகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.


அறிமுக டெஸ்ட் - ஆட்டநாயகன் விருது:


இச்சூழலில் இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜூரலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,  துருவ் ஜூரல் தனது முதல் டெஸ்ட் தொடரிலேயே ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியிருக்கிறார். முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் துருவ் ஜூரல். அதன்படி தன்னுடைய அறிமுக போட்டியில் 104 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 46 ரன்கள் எடுத்தார். அதேபோல், கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களை குவித்தது. பின்னர் தங்களது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்களை எடுத்தார்.


பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க ஒரு கட்டத்தில் இந்திய அணி தடுமாறியது. அப்போது களம் இறங்கிய துருவ் ஜூரல் தன்னுடைய நிதானமான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்களை பெற்றுக்கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அதன்படி, மொத்தம் 149 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 90 ரன்களை குவித்தார். அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற இவர் 77 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 39 ரன்கள் எடுத்தார்.


அந்த வகையில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் துருவ் ஜூரல் தனது முதல் தொடரிலேயே ஆட்டநாயகன் விருதை வென்று அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.


மேலும் படிக்க: Dhruv Jurel: கார்கில் போர் வீரரான தந்தைக்கு பிக் சல்யூட் - துருவ் ஜூரல் பின்னணி தெரியுமா?


மேலும் படிக்க: IND vs ENG: 10 விக்கெட்டுகளையும் அள்ளிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள்! இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் சாதனை!