இலங்கை கிரிக்கெட் மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ஜாம்பவானாக திகழும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் '800' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (செப்டம்பர் 5) வெளியாகிறது. இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 800 திரைப்படத்தின் ட்ரைலரை இன்று சச்சின் டெண்டுல்கர் மும்பையில் வெளியிடுகிறார். இந்த படத்தில் முரளிதரன் கேரக்டரில் ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த நடிகர் மதுர் மிட்டல் நடிக்கிறார்.


முத்தையா முரளிதரனின் 800 திரைப்படம் எம்.எஸ்.ஸ்ரீபதி எழுதி இயக்க, இந்த படம் இந்தி தவிர தமிழ், தெலுங்கு என 3 இந்திய மொழிகளில் வெளியாகிறது. முரளிதரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்படும். தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டீசரில் முரளிதரனின் வாழ்க்கை, இலங்கை போர் தொடர்பான சில முக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.






இப்படத்தில் முரளிதரன் கேரக்டரில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், எதிர்ப்புகள் காரணமாக அவர் தான் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து 800 திரைப்படத்தில் இருந்து வெளியேறுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். இதையடுத்து, ஒருசில மாதங்களாக நடிகர் முரளிதரன் போன்று நடிகர் தேர்வு நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்தே, ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த நடிகர் மதுர் மிட்டல் கிரிக்கெட் வீரர் முரளிதரன் உருவ பொறுத்தத்திற்கு தேர்வானார். தொடர்ந்து, படப்பிடிப்பு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.


இதையும் படிங்க: Anirudh Gets Porsche Car: கலெக்‌ஷனை அள்ளிய ஜெயிலர்.. அனிருத் வீட்டிற்கே வந்த சொகுசு கார்..அசத்திய கலாநிதிமாறன்..!


இந்த படத்திற்கு உலக கிரிக்கெட் அனைவரும் காத்திருக்கும் சூழலில், இன்று 800 திரைப்படம் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்படும். இந்த படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் வெளியிடுகிறார் என்பதே குறிப்பிடத்தக்கது. 


இலங்கை ஜாம்பவான் முரளிதரன், இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தனது வாழ்க்கையில் 13 முறை அவுட் செய்துள்ளார். அதேசமயம் முரளிதரன் தனது கடைசி சர்வதேச போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார் என்பது முக்கியமானது. 


டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள்:


முத்தையா முரளிதரன், சென்னையை சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்பவரை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 1992 ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். இதற்குப் பிறகு, முரளி 133 டெஸ்ட் போட்டிகளில் 22.73 சராசரியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த காலகட்டத்தில், ஒரு இன்னிங்சில் 67 முறை 5 விக்கெட்டுகளையும், 22 முறை ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சாதனையை முரளி படைத்துள்ளார். இது தவிர, முரளிதரன் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 534 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 




மேலும் படிக்க: ’10 ரூபாய் சீப்பு இருந்தால் நானே சீவிக்கிறேன்’.. அயோத்தி சாமியாரின் அறிவிப்புக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி!