Anirudh Gets Porsche Car: ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற நிலையில் இசையமைப்பாளர் அனிருத்திற்கு உயர் ரக போர்ஸ்சே காரை கலாநிதி மாறன் வழங்கியுள்ளார். 


நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளிவந்த ஜெயிலர் படம் பிரமாண்ட வெற்றிப்பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.525 கோடியை அதிகாரப்பூர்வமாக தாண்டி வசூலாகி வருவதால் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியில் உள்ளது. இந்த நிலையில் படத்தின் மாஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் உள்ளிட்டோருக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் சொகுசு கார்களை பரிசாக வழங்கினார். 


ரஜினியை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்த கலாநிதி மாறன் காசோலையை பரிசாக வழங்கியதுடன் அவரது வீட்டிற்கு முன்பு சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டன. அதில், BMW X7 காரை ரஜினி தேர்வு செய்தார். ரஜினியை தொடர்ந்து நெல்சனை சந்தித்த கலாநிதி மாறன், இயக்குநரான அவருக்கு போர்சே சொகுசு காரை பரிசாக வழங்கினார். 






இந்த நிலையில் இன்று அனிருத்தை சந்தித்த கலாநிதி மாறன், 3 கார்களை நிறுத்தி விருப்பப்பட்ட காரை தேர்வு செய்ய சொன்னார். அதில் அனிருத்திற்கு பிடித்த காரின் சாவியை வழங்கிய கலாநிதி மாறன் நன்றி தெரிவித்து கொண்டார். வீடு தேடி வந்து காரை பரிசாக வழங்கியதால் அனிருத் உற்சாகத்தில் உள்ளார்.






ஆக்‌ஷன் அதிரடிகளை கொண்ட ஜெயிலர் படத்தில் தலைவரு அலப்பறை பாடல் ஒவ்வொரு ரஜினி ரசிகர்களையும் கொண்டாட வைத்ததுடன், டிரெண்டிங்கிலும் உள்ளது. படத்தின் கூஸ்பம்ப் இசைக்காகவும், பாடல்களின் வெற்றிக்காகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனிருத்திற்கு உயர் ரக கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்துக்காக ரஜினி, நெல்சன், அனிருத் என ஒவ்வொருவரும் கோடிகளில் விலை மதிப்புள்ள காரை பரிசாக பெற்று வருவது திரைத்துறை வட்டாரத்தில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: