கிரிக்கெட் உலகம் ஆவலோடு எதிர்பார்த்த உலக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பல அழகான தருணங்கள் நீங்கா நினைவுகளாகிப்போகும். அதன் தொடக்கமாக, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு தன்னுடைய ஜெர்சியில் கையெழுத்திட்டு அன்பளிப்பாக அளித்துள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் தொடங்கிய இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தத் தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டியில் உற்சாகம் அளிக்கும் விதமாக சச்சின் டெண்டுல்கர் விராட்டிற்கு ஜெர்சி அளித்திருப்பது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
விராட் கோலிக்கு சச்சின் தெண்டுல்கர், தான் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் அணிந்திருந்த ஜெர்சியில் கையெழுத்திட்டு அன்பு பரிசாக வழங்கியது நெகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் சப்போர்ட்:
சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி ஜெர்சியுடன் இருக்கும் ஒரு கட்டவுட் அருகே நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் (டிவிட்டர் என முன்பு அழைக்கப்பட்டது) வெளியிட்டு ‘இந்தியா... இந்தியா....’ என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். “ கடந்த உலகக் கோப்பையின் போது நீங்கள் அணியில் இருந்தீர்கள். இப்போது இந்தியா விளையாடும் போட்டியை காண வந்துள்ளீர்கள். நீங்கள் உற்சாகம் செய்வது மட்டும் போதும். இந்திய அணி வென்றுவிடும்.” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:
பேட்ஸ்மேன்கள் | போட்டிகள் | ரன்கள் | சராசரி | ஸ்ட்ரைக் ரேட் | அதிகபட்ச ஸ்கோர் |
விராட் கோலி (IND) | 10 | 711 | 101.57 | 90.68 | 117 |
குயின்டன் டி காக் (SA) | 9 | 591 | 65.66 | 109.24 | 174 |
ரச்சின் ரவீந்திரா (NZ) | 10 | 578 | 64.22 | 106.44 | 123* |
டேரில் மிட்செல் (NZ) | 10 | 552 | 69.00 | 111.06 | 134 |
ரோஹித் சர்மா (இந்தியா) | 10 | 550 | 55.00 | 124.15 | 131 |
ஷ்ரேயாஸ் ஐயர் (IND) | 10 | 526 | 75.14 | 113.11 | 128* |
டேவிட் வார்னர் (AUS) | 9 | 499 | 55.44 | 105.49 | 163 |
ரஸ்ஸி வான் டெர் டுசென் (SA) | 9 | 442 | 55.25 | 88.57 | 133 |
மிட்செல் மார்ஷ் (AUS) | 8 | 426 | 60.85 | 109.51 | 177* |
டேவிட் மாலன் (ENG) | 9 | 404 | 44.88 | 101.00 | 140 |
ஒரு உலகக் கோப்பை பதிவில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல்: விராட் கோலி முதலிடம்
கடந்த ஒருநாள் உலகக் கோப்பைகளில் ஒரே பதிப்பில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறினார்.
வீரர்கள் |
ரன்கள் |
ஆண்டு |
இன்னிங்ஸ் |
அதிகபட்ச ஸ்கோர் |
விராட் கோலி (IND) |
711 |
2023 |
10 |
117 |
சச்சின் டெண்டுல்கர் (IND) |
673 |
2003 |
11 |
152 |
மேத்யூ ஹைடன் (AUS) |
659 |
2007 |
10 |
158 |
ரோஹித் ஷர்மா (இந்தியா) |
648 |
2019 |
9 |
140 |
டேவிட் வார்னர் (AUS) |
647 |
2019 |
10 |
166 |
ஷாகிப் அல் ஹசன் (BAN) |
606 |
2019 |
8 |
124* |
குயின்டன் டி காக் (SA) |
591 |
2023 |
9 |
174 |
கேன் வில்லியம்சன் (NZ) |
578 |
2019 |
9 |
148 |
ரச்சின் ரவீந்திரா (NZ) |
565 |
2023 |
9 |
123* |
ஜோ ரூட் (ENG) |
556 |
2019 |
11 |
107 |
டேரில் மிட்செல் (NZ) |
552 |
2023 |
9 |
134 |
ரோஹித் ஷர்மா (IND) |
550 |
2023 |
10 |
131 |
மஹேல ஜெயவர்தன (SL) |
548 |
2007 |
11 |
115* |
மார்ட்டின் குப்டில் (NZ) |
547 |
2015 |
9 |
237* |
குமார் சங்கக்கார (SL) |
541 |
2015 |
7 |
124 |
ரிக்கி பாண்டிங் (AUS) |
539 |
2007 |
9 |
113 |
ஜானி பேர்ஸ்டோ (ENG) |
532 |
2019 |
11 |
111 |
ஷ்ரேயாஸ் ஐயர் (IND) |
526 |
2023 |
10 |
128* |
சச்சின் டெண்டுல்கர் (IND) |
523 |
1996 |
7 |
137 |
ஆரோன் பின்ச் (AUS) |
507 |
2019 |
10 |
153 |
திலகரத்ன தில்ஷன் (SL) |
500 |
2011 |
9 |
144 |
மேலும் வாசிக்க..