India vs Australia World Cup Final 2023 History: உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில், ஆஸ்திரேலிய அணி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்:
இன்று நடைபெற உள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டி, பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. 2003ம் ஆண்டு இறுதிப்போட்டி தோல்விக்கு பழிவாங்கும் விதமாக, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 3வது முறையாக கோப்பையை உயர்த்துமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரம், இந்தியாவை வீழ்த்தி 6வது முறையாக உலகக் கோப்பயை வெல்ல, ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன் சேர்த்த அணிகள், வீரர்கள் மற்றும் பிரமாண்ட வெற்றி தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி புள்ளி விவரங்கள்:
- உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஒரு அணியால் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் - 359/2 (2003ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி சேர்த்தது)
- உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஒரு அணியால் சேர்க்கப்பட்ட குறைந்தப்ட்ச ரன்கள் - 132/10 (1999ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி சேர்த்தது)
- ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தனிநபரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் - 2007ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் 149 ரன்களை குவித்தார்
- ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சிறந்த பந்துவீச்சு - 1979ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக மேற்கிந்திய திவுகள் வீரர் ஜோயல் கார்னர் 38 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றி - 2003ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
- ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் விக்கெட்டுகள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றி - 1999ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
சாதனை தகர்க்கப்படுமா?
இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி, பேட்டிங்கிற்கு சாதகமான அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனால், பேட்டிங்கில் உள்ள பழைய சாதனைகள் தகர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.