ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன்:


22 வருடங்களாக தன்னுடைய பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்களை திணறடித்தவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர் இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டார்.


இச்சூழலில் தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன் குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் , “ஹே ஜிம்மி! அந்த நம்பமுடியாத 22 வருட ஸ்பெல் மூலம் நீங்கள் ரசிகர்களை கவர்ந்து விட்டீர்கள். நீங்கள் விடைபெறும்போது இதோ ஒரு சிறிய ஆசை. அந்த அதிரடி, வேகம், துல்லியம், ஸ்விங் மற்றும் உடற்தகுதியுடன் நீங்கள் பந்து வீசுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.





உங்கள் விளையாட்டின் மூலம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டத்திற்கு - குடும்பத்துடன் இருக்கும் நேரத்திற்கு நீங்கள் செல்வதால் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் அற்புதமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.


சிறந்த பேட்டர் சச்சின் டெண்டுல்கர்:






முன்னதாக நேற்று அளித்த பேட்டி ஒன்றின் பேசிய ஆண்டர்சன்,"சிறந்த பேட்டர் சச்சின் டெண்டுல்கர் என்றே கூறுவேன். அவருக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட ஆட்ட உத்தியை வகுக்க முடிந்ததாக நான் கருதவில்லை. சச்சின் இறங்கும் போதெல்லாம் நான் நினைப்பது ‘மோசமான பந்துகளை அவருக்கு வீசக்கூடாது’ என்பதைத்தான். ஏனெனில், மோசமான பந்துகளை அவர் அடித்து நொறுக்கி விடுவார். அப்படிப்பட்ட பிளேயர் அவர்" என்று கூறியிருந்தார்.


மேலும் படிக்க: Gautam Gambhir: பயிற்சியாளர் ஆனதும் கம்பீர் வீரர்களுக்கு வைத்த முதல் வேண்டுகோள் - என்ன?


மேலும் படிக்க: TNPL : டிஎன்பிஎல் போட்டியில் திருப்பூர் அணிக்கு கேப்டனான சாய் கிஷோர் ; தோல்வியில் இருந்து மீளுமா?