இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடினார். அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் ஆண்டர்சன். அந்தவகையில் தன்னுடைய கடைசி போட்டியில் களம் இறங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சனை இரு அணி வீரர்களும் மரியாதையுடன் வரவேற்றனர்.


அதிக விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர்:


41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களே 700 விக்கெட்களை எடுத்திருந்தனர்.


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின்படி 704 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார்.


கடைசி டெஸ்ட்:






இச்சூழலில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்று விளையாடினார். அதன்படி தன்னுடைய கடைசி போட்டியில் களம் இறங்கிய அவருக்கு இரு நாட்டு வீரர்களும் மரியதையுடன் வரவேற்றனர். இதனை ஏற்றுக்கொண்ட ஆண்டர்சன் உணர்ச்சி பொங்க காணப்பட்டார். 


தன்னுடைய 22 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 991 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.


அதன்படி 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகளும், 194 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Gautam Gambhir: பயிற்சியாளர் ஆனதும் கம்பீர் வீரர்களுக்கு வைத்த முதல் வேண்டுகோள் - என்ன?


மேலும் படிக்க: TNPL : டிஎன்பிஎல் போட்டியில் திருப்பூர் அணிக்கு கேப்டனான சாய் கிஷோர் ; தோல்வியில் இருந்து மீளுமா?