நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டேலர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். 37 வயதான அவர், டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிகாக அதிக ரன்கள் சேர்த்த பேட்டராக இருக்கிறார். 


அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி தனது கிரிக்கெட் பயணத்தை முடித்து கொள்ள இருக்கிறார் டேலர். இடையில், தென்னாப்ரிக்காவுக்கு எதிராக நடக்க இருக்கும் டெஸ்ட் தொடரில் டேலர் பங்கேற்க மாட்டார் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


டெஸ்ட், ஒரு நாள், டி20 எனமூன்று கிரிக்கெட் ஃபார்மெட்களிலும் 100 போட்டிகளில் பங்கேற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கு சொந்தகாரர். ஓய்வு அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர், ”17 ஆண்டுகளாக எனக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. நியூசிலாந்து அணிக்காக விளையாடியதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் #234” என பதிவிட்டிருக்கிறார்.


மேலும் படிக்க: சிவசங்கர் பாபா விட்டதை பிடிக்க நினைத்து... இருந்ததை இழந்த அன்னபூரணி அரசு அம்மா!


ட்விட்டரில் ராஸ் டேலர்:






2006-ம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட்டிலும், 2008-ம் ஆண்டு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார் டேலர். டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் டாப் ஸ்கோரிங் பேட்டராக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7584 ரன்கள், 19 சதங்கள், ஒரு நாள் கிரிக்கெட்டில் 8591 ரன்கள், 21 சதங்கள் எடுத்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை, 102 போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார் அவர்.


டேலரின் ஓய்வுக்கு முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண