இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், மும்பை ரஞ்சி கோப்பை அணியில் இடம் பிடித்திருக்கிறார். ப்ரித்வி ஷா தலைமையில் களமிறங்க இருக்கும் மும்பை அணியில், வேகப்பந்துவீச்சாளரார் அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு, U-19 உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை தலைமை தாங்கிய ப்ரித்வி ஷா, விஜய் ஹசாரே கோப்பையின் கடைசி சீசனில் மும்பை அணிக்கு கோப்பையை கைப்பற்றி தந்தார். அதனை தொடர்ந்து, முதல் தர கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக தலைமை தாங்க இருக்கிறார்.
இந்நிலையில், 22 வயதேயான அர்ஜூன் டெண்டுல்கர் கடந்த ஆண்டு நடைபெற்ற சயத் முஸ்தாக் அலி கோப்பைக்கான மும்பை அணியின் தேர்வு செய்யப்பட்டார். ஹரியானாவுக்கு எதிரான அறிமுக போட்டியில் 3 ஓவர்கள் வீசி, 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை, மும்பை இந்தியன்ஸ் அணி 20 லட்சம் ரூபாய்க்கு அர்ஜூன் டெண்டுல்கரை ஒப்பந்தம் செய்தது. ஆனால், இந்த சீசனில் அவர் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை. 41 முறை ரஞ்சி கோப்பை சாம்பியன்களாக முடிசூடியிருக்கும் வலுவான மும்பை அணியில், அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பிடித்திருப்பது அவரது கிரிக்கெட்டிங் கரியரில் முக்கிய காலமாக இருக்கும் என தெரிகிறது. நட்சத்திர கிரிக்கெட் வீரரின் மகன் என்பதால் அவர் மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. வாய்ப்புகள் கிடைத்திருப்பதால், இனி அவர் விளையாட இருக்கும் போட்டிகளை வைத்து அவரது கிரிக்கெட் திறனை அளவிடலாம் என கிரிக்கெட் வட்டாரம் காத்திருக்கிறது.
அணி விவரம்: ப்ரித்வி ஷா (கேப்டன்), யஷஸ்வி ஜேஸ்வால், அகர்ஷித் கொமேல், அர்மான் ஜாஃபர், சர்ஃபராஸ் கான், சச்சின் யாதவ், ஆதித்யா டாரே (விக்கெட் கீப்பர்), ஹர்திக் தமோரே (விக்கெட் கீப்பர்), சிவம் டூபே, அமன் கான், சாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன், பிரஷாந்த் சொலாங்கி, ராய்ஸ்டன் டியாஸ், அர்ஜூன் டெண்டுல்கர்
ஜனவரி 13-ம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை போட்டிகள், மார்ச் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்