தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்பு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு சுருண்டது.மூன்றாவது நாளான நேற்று முன்தினம் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. 


 நேற்று தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியில் ஷர்துல் தாகூர்(10) ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் ராகுலும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு பிறகு முதல் பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் ஜென்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து புஜாரா 16 ரன்களில் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேபோல் ரஹானேவும் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த வீரர்களில் ரிஷப் பண்ட் மட்டும் 34 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 


இதன்காரணமாக இந்திய அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 305 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களாக மார்க்கரம் மற்றும் கேப்டன் டீன் எல்கர் வந்தனர். 


1 ரன்களில் மார்க்கரம் வெளியேற, 17 ரன்கள் எடுத்திருந்த கீகன் பீட்டர்சனும் சிராஜ் பந்து வீச்சில் பண்ட்டிடம் கேட்ச் ஆனார். இந்தநிலையில், வான் டெர் டுசெனுக்கு எதிராக பும்ரா வீசிய பந்து ஸ்டம்பை பதம் பார்த்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 






அதில், பும்ரா வீசிய பந்து ஒன்றை வான் டெர் டுசென் உள்ளே வராது என்று விட அது இன் ஸ்விங் ஆகி நேராக போல்ட்டானது. இதை எதிர்பார்க்காத வான் டெர் டுசென் அவுட் ஆனது அவருக்கே பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 


நான்காவது நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 94 ரன்களுடன் தடுமாறி வருகிறது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக 52 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். இந்திய அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்களும், பும்ரா மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்களும் கைப்பற்றியுள்ளனர். இன்றைய போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அனைத்து விக்கெட்களையும் கைப்பற்றும் பட்சத்தில் வெற்றி பெறும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண