2007 ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. டி20 போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு கிரிக்கெட் விளையாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விளையாட்டு மற்றும் வீரர்கள் அதை எவ்வாறு அணுகினார்கள் என்பது உட்பட எல்லாம் மாறி உள்ளது. ஒருநாள் போட்டிகள் விளையாடுவதிலும், அதனை பார்ப்பதிலும் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. டெஸ்ட் போட்டிகள் அளவுக்கு கூட ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்பாக இல்லை என்ற குடச்சாட்டுகள் வரத் தொடங்கி உள்ள நிலையில், டி20 போட்டிகளை எல்லா அணிகளும் அதிகமாக விரும்பி விளையாட துவங்கி உள்ளனர். தற்போதெல்லாம் தொடர்ந்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடர்கள் நடக்க ஆர்மபித்துள்ளன. உலகக்கோப்பையிலும் டி20 உலகக்கோப்பைக்கு மவுசு கூடி உள்ளது. ஆப்கனிஸ்தான் போன்ற அணிகள் நல்ல வீரர்களை உருவாக்கி வருகிறது. டொமஸ்டிக் கிரிக்கெட் மேலும் உச்சம் பெற்றுள்ளது. இதில் மிகச் சிலரே முன்பிருந்த கிரிக்கெட் உலகையும், தற்போதுள்ள உலகையும் கண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் ரோகித் ஷர்மா.


15 ஆண்டுகால மாற்றம்


15 ஆண்டுகளுக்கு முன் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நான்கு வீரர்களில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் ஒருவர். அந்த ஆண்டு அப்போதைய கேப்டன் தோனியின் கீழ் இந்தியா ஒரு கோப்பையை தட்டியது. இது இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் காட்டியது. 2022 டி20 உலகக் கோப்பையின் தொடக்கத்திற்கு முன்னதாக, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் தனது முன்னாள் இந்திய கேப்டன் தோனி போல கப் ஜெயித்து தர முடியும் என்று நம்பும் ரோஹித், வெற்றிகரமான இந்திய அணியின் ஒரு பகுதியாக இருப்பதையும், பல ஆண்டுகளாக டி 20 எவ்வாறு மாறிவிட்டது என்பதையும் நினைவு கூர்ந்தார்.



ரோஹித்தின் முதல் உலகக்கோப்பை


அப்போது இருபது வயதே ஆன ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில்தான் அறிமுகமானார். ஆனால் அப்போது அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது ரோஹித் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டராக இருந்தார். தனது இரண்டாவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, அவர் 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். பின்னர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்தார்.


தொடர்புடைய செய்திகள்: watch video: ”பறக்க பறக்க துடிக்குதே..!“ தன்னை மறந்து நடனமாடிய Zomato ஊழியரின் வைரல் வீடியோ !


டி20 ஃபார்மட்டில் ரோஹித்


அவரது கிரிக்கெட் வாழ்க்கையில், இந்தியாவுக்காக 142 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 3737 ரன்களுடன், 32 அரைசதத்திற்கு மேல் அடித்துள்ளார். ரோஹித் UAE இல் நடந்த கடந்த உலகக் கோப்பையில் இருந்து இந்தியாவின் முழுநேர கேப்டனாக இருந்து வருகிறார். வெள்ளிக்கிழமை, அவர் தனது முதல் டி 20 உலகக் கோப்பை அனுபவத்தை நினைவு கூர்ந்தபோது, ​​அந்த வடிவமைப்பைப் பற்றி தனக்கு மிகக் குறைவாகவே தெரியும் என்றும், இந்தியா கோப்பையை வெல்லும் வரை உலகக் கோப்பை அணியின் ஒரு பகுதியாக இருப்பது எப்படி என்று எனக்கு புரியவில்லை என்றும் அவர் வெளிப்படுத்தினார்.



2007 உலகக்கோப்பை பற்றி பேசிய ரோஹித்


மெல்போர்னில் பேசிய ரோஹித், "அந்த உலகக் கோப்பைக்கு நான் தேர்வு செய்யப்பட்டபோது என்னைப் பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இது எனது முதல் உலகக் கோப்பை என்பதால் நான் போட்டியை ரசித்து விளையாட விரும்பினேன். உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருப்பது எப்படி இருக்கும், அதை வெல்லும் வரை அது எவ்வளவு பெரிய விஷயம் என்பது பற்றி எனக்குப் புரியவில்லை", என்றார். இந்த முறை தனது எட்டாவது டி 20 உலகக் கோப்பையை விளையாடும் ரோஹித், தொடக்க டி20 உலகக் கோப்பை மற்றும் இந்த ஆண்டு ஆகிய இரண்டிலும் ஒரு பகுதியாக இருந்த வெறும் நான்கே வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இவரோடு இந்திய அணியில் தற்போது இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திக்கும் அந்த நான்கில் ஒருவராக இருக்கிறார். ரோகித் ஷர்மா தற்போது 15 ஆண்டுகளில் ஆட்டம் எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் பற்றி பேசினார். "இது ஒரு நீண்ட பயணம், விளையாட்டு மிகவும் வளர்ந்துள்ளது. 2007 இல் இருந்ததை ஒப்பிடும்போது, ​​இப்போது எப்படி விளையாடப்படுகிறது என்பதை நீங்களே பார்க்கலாம். அப்போது 140 அல்லது 150 என்பது நல்ல ஸ்கோர், இப்போது 14 அல்லது 15 ஓவர்களில் அந்த ஸ்கொரை அடிக்க அணிகள் முயற்சி செய்கிறார்கள்", என்றார்.