பண்டிகை காலங்கள் என்றாலே கொண்டாட்டம்தான். இந்தியாவில் பெருவாரியான மக்கள் சரஸ்வதி பூஜை, நவராத்திரி , தீபாவளி , விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல விழாக்களை ஒருமித்தே கொண்டாடுகின்றனர். குறிப்பாக நவராத்திரி என்பது வட இந்தியாவில்தான் மிகவும் பிரபலம்.
9 நாட்கள் 9 தேவிகள் என நடத்தப்படும் பூஜையின் ஒவ்வொரு நாள் இரவு பொதுமக்கள் ஒன்றுக்கூடி கர்பா, தாண்டியா உள்ளிட்ட நடனங்களை பாரம்பரிய உடைகளை அணிந்து, குழுவாக ஆடி மகிழ்வார்கள். கர்பா என்பது பெண்மையை போற்றும் ஒரு வகை நடனம். இது குஜராத்தில் இருந்து பிறந்தது என்றாலும் வட இந்தியாவில் இவ்வகை நடனம் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் .
நம்ம ஊரில் எப்படி தப்பு இசை கேட்டால் நம்மையே அறியாமல் ஒரு உத்வேகம் பிறக்குமோ அப்படித்தான , கர்பா நடனத்திற்காக வாசிக்கப்படும் டோல் மற்றும் இசைக்கருவிகள் அங்குள்ளவர்களையும் மெய் மறந்து ஆடச்சொல்லும். அப்படியான ஒரு வீடியோத்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் உள்ள ஆர்கேட் எர்த் என்னும் குடியிருப்பு பகுதிக்கு வந்த ஸொமோட்டோ ஊழியர் ஒருவர், தனது ஆடரை செலிவரி செய்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். அப்போது அங்கு கர்பா நடனத்திற்கான இசை ஒலிக்கிறது. அதை கேட்ட அந்த நபர், மகிழ்ச்சியாக தனக்கு தெரிந்த கர்பா நடன அசைவுகளை ஆடிக்கொண்டே அங்கிருந்து சென்றுக்கொண்டிருக்க, அருகில் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் அவரை வித்தியாசமாக பார்த்துக்கொண்டு ஒதுங்கி நிற்கிறார். இதனை அங்கிருந்த குடியிருப்புவாசி ஒருவர் இணையத்தில் பதிவேற்றிவிட்டார். இந்த வீடியோ பலரின் விருப்பத்தை பெற்றுள்ளது.
ஆஷ்லிஷ் முலே என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இந்த வீடியோ , இதுவரையில் 253 k க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் பலர் ” இப்படியான சொந்த மகிழ்ச்சியை தொலைத்துவிட்டுதான் யாருக்காகவோ இங்கு சிலர் உழைப்பு உழைப்பு என்றிருக்கிறார்கள் “ என இந்த வீடியோவிற்கு கீழ் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.