ஆஸ்திரேலியாவில் இன்று 8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் (இன்று) அக்டோபர் 16 தொடங்கி அடுத்த மாதம் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடரில் 16 அணிகள் கலந்துகொண்டு, ஏழு ஆஸ்திரேலிய நகரங்களில் 45 போட்டிகளில் விளையாட இருக்கின்றனர்.


இந்த நிலையில், நடைபெறும் 45 போட்டிகளில் அரையிறுதி உட்பட ஏழு போட்டிகள் அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் முக்கியமான தகவல் என்னவென்றால், கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் அடிலெய்டு மைதானத்தில் டி20 போட்டி நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக தற்போது நெட்டிசன்கள் #Adelaide என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


கடைசியாக அடிலெய்டு மைதானத்தில் 2019, அக்டோபர் 27ம் தேதி ஆஸ்திரேலியா vs இலங்கை இடையிலான போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


அதேபோல், இந்த மைதானத்தில் இதுவரை 85 டி20 போட்டிகள் நடைபெற்று இருந்தாலும் சர்வதேச டி20 போட்டிகளை பொறுத்தவரை 5 மட்டுமே நடந்துள்ளது. அந்த 5 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 3ல் வெற்றியும், 2ல் தோல்வியும் கண்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, ஒரே போட்டியில் விளையாடி அதிலும் வெற்றி கண்டுள்ளது. 


புள்ளி விவரங்கள்: மொத்த போட்டிகள்- 85 (அனைத்து போட்டிகளையும் சேர்த்து)



  • முதலில் பேட்டிங் செய்த அணி பெற்ற வெற்றி- 52

  • இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி பெற்ற வெற்றி - 32

  • ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 233 (ஆஸ்திரேலியா)

  • குறைந்த ஸ்கோர் - 99/9 (இலங்கை)

  • தனிநபரின் அதிகப்பட்ச ஸ்கோர் - டேவிட் வார்னர் (100)

  • அதிக சிக்ஸர்கள் : ஆரோன் பின்ச் (8)

  • அதிகபட்ச பார்ட்னர்ஷிப்: வி கோஹ்லி / எஸ் ரெய்னா: 134

  • அதிக விக்கெட்டுகள்: ஆடம் ஜம்பா, ஷேன் வாட்சன்: 6

  • சிறந்த பந்துவீச்சு: ஷேன் வாட்சன்: 4/15


இந்திய அணியை பொறுத்தவரை : 



  • அதிகபட்ச எண்ணிக்கை: 188/3

  • தனிநபரின் அதிகப்பட்ச ஸ்கோர் - விராட் கோலி (90)


அடிலெய்டு மைதானத்தில் கிரிக்கெட்டை தவிர, கால்பந்து (1877 முதல்), ரக்பி லீக் (1997-1998), வில்வித்தை, தடகளம், பேஸ்பால், சைக்கிள் ஓட்டுதல், அமெரிக்க கால்பந்து, ஹைலேண்ட் கேம்கள், ஹாக்கி, லாக்ரோஸ், லான் டென்னிஸ், ரக்பி யூனியன், குவோயிட்ஸ் மற்றும் சாக்கர் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றுள்ளது. 


பொதுவாக, அடிலெய்டு ஓவல் ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்டிங் விக்கெட்டாகக் கருதப்படுகிறது. அதேபோல், சுழற்பந்து சுற்றுக்கு சாதகமாகவும் பார்க்கப்படுகிறது. 


அடிலெய்டு மைதானத்தின் முக்கிய நிகழ்வுகள்: 



  1. 1884-85 ஆம் ஆண்டில் அது தனது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

  2. 1975 இல் ஆஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை எதிரான போட்டி இந்த மைதானம் அதன் முதல் ஒருநாள் போட்டியை நடத்தியது.

  3. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

  4. இந்தியாவின் விராட் கோலி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் அனைத்து வடிவங்களிலும் அதிக சதங்களை அடித்துள்ளார். அவரது 71 சர்வதேச சதங்களில் 5 சதங்களை கோலி இங்கு அடித்துள்ளார்.

  5. இந்தியா அடிலெய்டு ஓவல் மைதானத்தில் விளையாடிய 29 போட்டிகளில் 12ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2020 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்தியா 36 ரன்களில் சுருண்டது குறிப்பிடத்தக்கது. 


டி 20 உலக கோப்பை போட்டி அட்டவணை : 



  • நவம்பர் 2- B1 vs A2, 34வது போட்டி, சூப்பர் 12 (குரூப் 2)

  • நவம்பர் 2 - இந்தியா vs பங்களாதேஷ், 35வது போட்டி, சூப்பர் 12 (குரூப் 2)

  • நவம்பர் 4 - நியூசிலாந்து vs B2, 37வது போட்டி, சூப்பர் 12 (குரூப் 1)

  • நவம்பர் 4 -ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான், 38வது போட்டி, சூப்பர் 12 (குரூப் 1)

  • நவம்பர் 6 - தென்னாப்பிரிக்கா vs A2, 40வது போட்டி, சூப்பர் 12 (குரூப் 2)

  • நவம்பர் 6 - பாகிஸ்தான் vs பங்களாதேஷ், 41வது போட்டி, சூப்பர் 12 (குரூப் 2)

  • நவம்பர் 10 -2வது அரையிறுதி