வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின்போது ரிலாக்ஸாக உட்கார்ந்து கொண்டு உணவு சாப்பிடுகிறார் விராட் கோலி. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


டி20 உலகக்கோப்பை:


ரசிகர்களில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கி இருக்கிறது ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை. அந்தவகையில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் தொடங்கியது முதல் போட்டி.


பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கோலி:


இதில் அமெரிக்கா மற்றும் கனடா விளையாடியது. அதன்படி தங்களது வெற்றிக் கணக்கை முதல் போட்டியிலேயே தொடங்கி உள்ளது அமெரிக்கா. முன்னதாக நேற்று (ஜூன் 1) நடைபெற்ற பயிற்சி போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. அந்தவகையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது.


இந்திய அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 53 ரன்களும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் விளாசினார்கள். பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தது. அதேநேரம் இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடவில்லை. அவர் ஏன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை என்றும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுப்பினார்கள்.


அப்போ எனக்கு பசிக்கும்ல:


இந்நிலையில் தான் விராட் கோலி தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது ரிலாக்ஸாக உட்கார்ந்து கொண்டு உணவு சாப்பிடுகிறார் விராட் கோலி.






இந்த வீடியோவை தான் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இதனிடையே இந்திய அணி தங்களது முதல் போட்டியில் ஜூன் 5-ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய நேரப்படி இந்த போட்டியை இரவு 8 மணிக்கு காணலாம்.


அதேபோல் பகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஜூன் 9-ஆம் தேதி விளையாட உள்ளது. நியூயார்க்கில் உள்ள நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தை இரவு 8 மணிக்கு காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: USA vs Canada T20 WC 2024: 10 சிக்ஸர்! 22 பந்துகளில் அரைசதம்! கனடாவை கதிகலங்க வைத்த ஜோன்ஸ்! யார் இவர்?


மேலும் படிக்க: USA vs Canada T20 WC 2024: ஜோன்ஸ் வெறித்தனம்! வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையை தொடங்கிய அமெரிக்கா!