எல்லாரும் விளையாடுகிறார்கள் நான் மட்டும் இல்லையா என்று ரிஷப் பந்த் கேட்கும் விடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்த அப்டேட் என ரசிகர்கள் பூரிப்படைந்தது வருகின்றனர்.


ரிஷப் பந்த் விபத்து


2022 டிசம்பரில் நடந்த பயங்கரமான விபத்தில், ரிஷப் பந்த் கடுமையான காயங்கள் அடைந்து சில காலமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். டிசம்பர் 30, 2022 அன்று அதிகாலையில், 25 வயதான ரிஷப் பந்த், தனது சொந்த ஊரான ரூர்க்கிக்குச் சென்று கொண்டிருந்தபோது, டெல்லி-டேஹ்ராடூன் நெடுஞ்சாலையில், அவரது மெர்சிடிஸ் கார் டிவைடரில் மோதி தீப்பிடித்ததில், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். நட்சத்திர இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் அதிலிருந்து மீண்டு மறுவாழ்வு பெரும் முயற்சியில் இருந்தார். சமீபத்தில் அவர் மீண்டும் நடப்பது போன்ற வீடியோக்களைப் பகிர்ந்தது ரசிகர்களை மகிழச்செய்தது. அவர் இந்த ஐபிஎல்-இல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், அவர் இல்லாதது டெல்லி அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.



வைரலான விளம்பர வீடியோ


சமூக ஊடகங்களில் வலம் வரும் ஒரு விளம்பர வீடியோவில், பந்த் "எல்லாரும் விளையாடும்போது, நான் ஏன் வரக்கூடாது என தோன்றியது? நான் இன்னும் கேம் பாஸ்ல தான் இருக்கேன்! விளையாட வரேன்", என்று கூறினார். ஃபுட் டெலிவரி விளம்பரமான இதை, இணையத்தில் ரசிகர்கள் பரபரப்பாக பேசினர். அதற்கு முக்கிய காரணம் வீட்டிலேயே இருந்த ரிஷப் பந்த் மீண்டும் வெளியில் வந்ததுதான். 


தொடர்புடைய செய்திகள்: Prakash Raj : இந்தியாவைக் காப்பாற்ற விரும்பும் எல்லா வீடும், ராகுல் காந்தியின் வீடுதான்: பிரகாஷ் ராஜ்


விளையாட வரேன்


"கிரிக்கெட் மற்றும் உணவு. இரண்டு விஷயங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. கடந்த சில மாதங்களாக என்னால் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. ஆனால் டாக்டர் சரியாக சாப்பிடச் சொன்னார். அதனால் நான் வீட்டில் நிறைய ஆரோக்கியமான உணவுகளை வைத்திருந்தேன். ஐபிஎல் கிரிக்கெட் சீசன் சீக்கிரம் ஆரம்பிச்சுது. அப்போதுதான் இந்த விளம்பரத்தில் எல்லாரும் விளையாடும்போது, நான் ஏன் வரக்கூடாது என தோன்றியது? நான் இன்னும் கேம் பாஸ்ல தான் இருக்கேன்! விளையாட வரேன்" என்று பந்த் விடியோ குறித்து பேசினார்.






ஐபிஎல் 2023


இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 க்கு முன்னதாக காயமடைந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்திற்கு பதிலாக டெல்லி கேப்பிட்டல்ஸ் பெங்கால் அணியின் அபிஷேக் போரலை ஒப்பந்தம் செய்யக்கூடும் என்று ESPNcricinfo இன் அறிக்கை தெரிவிக்கிறது. போரல் ஒப்பந்தம் இன்னும் முறையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், புது தில்லியில் அந்த அணி ஒரு வார கால பயிற்சி முகாமில் பல பயிற்சிப் போட்டிகளைத் தொடர்ந்து ஆடி வருகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் கிரிக்கெட் இயக்குநர் சவுரவ் கங்குலி மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தலைமையில் பயிற்சி ஊழியர்களால் கவனிக்கப்படுவதோடு, போரல் மற்றும் மூன்று விக்கெட் கீப்பர்களான ஷெல்டன் ஜாக்சன், லுவ்னித் சிசோடியா, மற்றும் விவேக் சிங் ஆகியோரும் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.