மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான WPL இன் தொடக்க சீசனின் இருதிப்போட்டியைக் காண 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றதன் மூலம், இந்த தொடர் உலகளவில் பெண்கள் நிகழ்வுகளில் அதிக பார்வையாளர்களை பெற்ற நிகழ்வாக பெயர் பெற்றுள்ளது.


ஜியோ சினிமா ஸ்ட்ரீமிங்


ஒவ்வொரு போட்டியையும் லைவாக ஜியோசினிமா ஆப்பில், ஒவ்வொரு பயனரும் 50 நிமிடங்களுக்கு மேல் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4K ஸ்ட்ரீமிங்கைத் தவிர, பார்வையாளர்கள் மல்டி-கேமரா செட்டப், ஹைப் மோட் மற்றும் பல மொழிகளில் உள்ள நிபுணர்களின் விரிவான கமென்ட்ரி ஆகியவற்றை கொடுத்தது ஜியோ சினிமா. இது லீக்க்கின் ஆரம்ப எதிர்பார்ப்புகளையும் கணிப்புகளையும் எட்டுவதற்கு பெருமளவில் உதவியது.



அதிக பார்வையாளர்களை பெற்ற பெண்கள் விளையாட்டு


"எங்கள் நோக்கம் TATA WPL ஐ உலகின் மிகப்பெரிய பெண்கள் விளையாட்டு லீக்காக வளர்ப்பதாகும். அந்த பயணத்தில் இது ஒரு பெரிய பாய்ச்சலாகும். ஏற்கனவே முதல் சீசனில் உலகின் மிகப்பெரிய பார்வையாளர்களைப் பெற்ற விளையாட்டு நிகழ்வாக மாறி சாதனை படைத்துள்ளது" என்று Viacom18 Sports CEO அனில் ஜெயராஜ் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Congress Mps Resign : ’ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு’ காங்கிரஸ் எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு ?


விளம்பரதாரர்களுக்கு நன்றி


"இந்த நேரத்தில் எங்களை நேருக்கு நேர் சந்தித்த எங்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட விளம்பர பார்ட்னர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், பார்வையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தவும், உலகத் தரம் வாய்ந்த பார்வை அனுபவத்தை வழங்கவும் எங்களைத் தூண்டினர்," என்று அவர் மேலும் கூறினார். ஜியோசினிமா, இப்போது இலவசமாக, ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் மற்றும் பிற அனைத்து நெட்ஒர்க் பயன்பாட்டாளர்களுக்கும் கிடைக்கிறது. 



ஐபிஎல் ஸ்ட்ரீமிங்


இந்தியன் பிரீமியர் லீக்கை ஜியோ சினிமா, ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, போஜ்புரி, பஞ்சாபி, ஒரியா, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 12 மொழிகளில் இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. ஐபிஎல் 2023 சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது, நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இந்த சீசனில் எந்த கட்டணமும் இல்லாமல் அனைத்து போட்டிகளும் ஜியோசினிமாவில் நேரலையில் காணலாம். அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னர் ஜியோ சினிமா, 4K ஃபீட், மல்டி-லேங்குவேஜ் மற்றும் மல்டி-கேமரா பிரசன்டேஷன், ஸ்டேட்ஸ் பேக், மேலும் பல அம்சங்களுடன் வருகிறது. இதனால் ஏற்கனவே WPL இல் பெரும் சாதனை படைத்த பார்வையாளர்கள் எண்ணிக்கையால் ஐபிஎல் பார்வையாளர் எண்ணிக்கையும் புதிய உயரத்தை எட்டும் என்று தெரிகிறது.