டிசம்பர் 30 அன்று நடந்த பயங்கரமான கார் விபத்தில் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சையில் இருக்கும் அவருக்கு வலது முழங்காலில் தசைநார் கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கைகள் வெளிவந்துள்ளன.


வெளியான அப்டேட்


அந்தேரி மேற்கில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவ மையத்தின் தலைவரும் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் தோள்பட்டை சேவையின் இயக்குநருமான டாக்டர் டின்ஷா பர்திவாலாவால், வெள்ளிக்கிழமை பண்டிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறியதாக மிட்-டே செய்தித்தாள் அறிக்கை கூறுகிறது.


"வெள்ளிக்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில் டாக்டர் பார்திவாலா மற்றும் அவரது குழுவினர் அவரது வலது முழங்காலில் தசைநார் கிழிவு அறுவை சிகிச்சை செய்தனர், சுமார் 2 முதல் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை சுமூகமாக நடந்தது முடிந்தது" என்று அறிக்கை கூறுகிறது. நோயாளியின் தனியுரிமை காரணமாக இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மாட்டோம் என்றும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிக்கையை வெளியிடும் என்றும் மருத்துவமனை இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என்று அறிக்கை மேலும் கூறியது.



விபத்து


டிசம்பர் 30 அன்று, புதுடெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்த அவர், தனது மெர்சிடிஸ் காரை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். அதிகாலை 5:30 மணியளவில், டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் அவரது கார் சாலைப் டிவைடர் மீது மோதி தீப்பிடித்ததில் பண்ட், 25, பல காயங்களுக்கு உள்ளானார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் மங்களூர் மற்றும் நர்சன் இடையே பயங்கர கார் விபத்து ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள் : Twins Birth: வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.. அமெரிக்காவில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு...!


மருத்துவமனையில் அனுமதி


டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன், பந்த் ஆரம்பத்தில் சக்ஷாம் மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் ட்ராமா சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். புதன்கிழமை டேராடூனில் இருந்து மும்பைக்கு பந்த் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட பிறகு, மருத்துவர்கள் அவரது உடல்நிலையை மதிப்பீடு செய்து, வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவருக்கு சில அடிப்படை சுகாதார சோதனைகளை மேற்கொண்டனர், அதே நேரத்தில் இடது கை ஃபிராக்ச்சர் முழுமையாக சரியாக சில மாதங்கள் ஆகும் என்றும் அவர்கள் கூறினர். 



அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கைகள்


விபத்துக்கு பிறகு பிசிசிஐயின் முதல் அதிகாரப்பூர்வ மருத்துவ அப்டேட்டில், கார் விபத்திற்குப் பிறகு பந்த்-இன் நெற்றியில் இரண்டு வெட்டுக் காயங்கள் மற்றும் வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்துள்ளது என்றும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் கால்விரல் ஆகியவற்றிலும் காயம் ஏற்பட்டது என்றும் கூறுகிறது. அன்று மாலை வெளிவந்த, மூளை மற்றும் முதுகுத்தண்டின் எம்ஆர்ஐ ஸ்கேன் முடிவுகளை பார்க்கையில் எந்த பாதிப்புகளும் இல்லை என்று மருத்துவ அறிக்கை கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


மேலும், பண்ட் தனது முகத்தில் ஏற்பட்ட காயங்கள், சிதைந்த காயங்கள் மற்றும் சிராய்ப்புகளை சமாளிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட செய்தியும் வெளியாகி இருந்தது. முன்னதாக, புதன்கிழமை, பிசிசிஐ தனது இரண்டாவது அதிகாரப்பூர்வ மருத்துவ அப்டேட்டில், பந்த் டேராடூனில் இருந்து மும்பைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மாற்றப்படுவார் என்று கூறியது. மும்பையில், அவர் டாக்டர் பார்திவாலாவின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளார், மேலும் அவரது மீட்பு மற்றும் மறுவாழ்வு முழுவதும் பிசிசிஐ மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று கூறப்பட்டது.