Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?

Venkatesh Iyer Marriage: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரரான வெங்கடேஷ் ஐயர், ஸ்ருதி ரகுநாதன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

Continues below advertisement

Venkatesh Iyer Marriage: கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் ஐயரின் திருமணத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

வெங்கடேஷ் ஐயர் திருமணம்:

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர், ஸ்ருதி ரகுநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு நவம்பரில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட தம்பதிக்கு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் சூழப்பட்ட பாரம்பரிய விழாவில் இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, ஐயரின் திருமண விழாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதில், புதுமணத் தம்பதி தென்னிந்திய பாரம்பரிய திருமண உடையில் காணப்பட்டனர். இருவரும் இந்திய திருமணத்தின் வழக்கமான சடங்குகளை முடித்துக்கொண்டனர் என கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமண நிகழ்வில் சக கிரிக்கெட் வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?

கிரிக்கெட் வீரரான வெங்கடேஸ் ஐயர்,  கிரிக்கெட்டில் தீவிர முனைப்பு காட்டி வரும் சூழலில்,  ​​ஸ்ருதி இந்தியாவின் NIFT-ல் பேஷன் மேனேஜ்மென்ட்டில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 

PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்து முடித்துள்ளார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள லைஃப் ஸ்டைல் ​​இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வணிகப் பொருள் திட்டமிடுபவராக பணிபுரிகிறார்.

ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய வெங்கடேஷ்:

வெங்கடேஷ் ஐயருக்கு நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் அற்புதமானதாக அமைந்தது. கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல, முக்கிய பங்கு வகித்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)  அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், 29 வயதான அவர் 26 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் மூன்று பெரிய சிக்ஸர்களுடன் உட்பட 52 ரன்களை விளாசினார். 

மொத்தமாக நடப்பு தொடரில் 14 போட்டிகளில் விளையாடி, சுமார் 158 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 370 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 70 ரன்களை விளாசினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola