பிரதமர் மோடியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்ததாக தெரிவித்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
73 வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படைகள் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், உலகெங்கிலும் இருந்து இந்திய மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் கெய்ல், இந்திய மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
அதில், “73வது குடியரசு தினத்தையொட்டி இந்திய மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். காலை எழுந்தவுடன் பிரதமர் மோடியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்தேன். அந்த செய்தி, அவருடனும், இந்திய மக்களுடனும் எனக்கு இருக்கும் நல்லுறவை மீண்டும் நினைவுப்படுத்தியது. யூனிவெர்சல் பாஸின் வாழ்த்துகளும், நிறைய அன்பும்!” என ட்வீட் செய்திருக்கிறார்.
ஐபிஎல் தொடாரில் பங்கேற்று விளையாடிதன் மூலம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் கெயில். யூனிவெர்சல் பாஸின் சரவெடி சிக்சர்களையும், ஷாட்களையும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து இருப்பர். இந்நிலையில், பிரதமர் மோடி கெய்லுக்கு வாழ்த்து சொல்லியதும், கெயில் பதில் வாழ்த்து சொல்லியதும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்