மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ட்வெய்ன் ப்ராவோ. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரராக பல ஆண்டுகளாக வலம் வந்தவர். இவர் கடந்தாண்டுடன் ஐ.பி.எல். உள்பட அனைத்து போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.




இந்த நிலையில், ட்வெய்ன் ப்ராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புஷ்பாவின் ஸ்ரீவள்ளியின் இந்தி வெர்ஷன் பாடலுக்கு  நடனம் ஆடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பாடலுக்கு கண்ணாடியை அணிந்துகொண்டு நடனம் ஆடுவது போல புஷ்பா நடையை அங்குமிங்கும் நடக்கிறார்.






வெள்ளை நிற டீ சர்ட்டுடன் அந்த வீடியோவில் தோன்றும் ப்ராவோ ஆடும்போதே அவரது செருப்பும் கழன்று கொண்டு விடுகிறது. ப்ராவோவும் சிரித்துக்கொண்டே செருப்பை மீண்டும் அணிந்துகொண்டு நடனம் ஆடுகிறார். ப்ராவோவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடும்போது ப்ராவோவின் பேட்டிங், பவுலிங்கை காட்டிலும் அவரது குறும்புத்தனத்தையே ரசிகர்கள் அதிகளவில் ரசித்தனர். விக்கெட்டை வீழ்த்தியதும் அவர் ஆடும் நடனமும், வெற்றி பெற்ற பிறகு அவர் போடும் ஆட்டமும் அவருக்கென்றே ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கியது.




38 வயதான ட்வெய்ன் ப்ராவோ 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2200 ரன்களையும், 164 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 968 ரன்களையும், 91 டி20 போட்டிகளில் ஆடி 1,255 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களையும், 13 அரைசதங்களையும், ஒருநாள் போட்டிகளில் 2 சதங்களையும், 10 அரைசதங்களையும், டி20 போட்டிகளில் 4 அரைசதங்களையும் அடித்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான ப்ராவோ டெஸ்டில் 86 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 199 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 78 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


சி.எஸ்.கே.வின் முக்கியமான வீரரான ப்ராவோ 151 ஐ,பி.எல். போட்டிகளில் ஆடி 1,537 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 5 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 70 ரன்களை எடுத்துள்ளார். மேலும், 167 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண