ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய அணி ஒரு தரமான சம்பவத்தை செய்தது. அந்த சம்பவம் என்ன? இந்திய அணி எப்படி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது?


2003-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்தது. அந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அப்போது ரிக்கி பாண்டிங்(242) இரட்டை சதம் கடந்து அசத்தினார். இதன்காரணமாக ஆஸ்திரேலிய அணி 556 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அனில் கும்ப்ளே 5 விக்கெட் வீழ்த்தினார். 




இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் டிராவிட் 233 ரன்களும், விவிஎஸ் லக்‌ஷ்மண் 148 ரன்களும் அடித்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 523 ரன்கள் எடுத்தது. அதன்பின்பு இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 196 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய அஜித் அகர்கர் 41 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் சச்சின் டெண்டுல்கரும் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி போட்டியை வெல்ல 230 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 


 



அந்த இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு வீரேந்திர சேவாக் 47 ரன்களுடன் சிறப்பான அடித்தளம் அமைத்தார். அதன்பின்னர்  மீண்டும் சிறப்பாக விளையாடிய ராகுல் டிராவிட் அரைசதம் கடந்தார். அவர் 72 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. அடிலெய்டு மைதானம் ஆஸ்திரேலியாவிற்கு எப்போதும் ராசியான மைதானமாகவே இருந்துள்ளது. அந்த மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது பெரும் சம்பவமாக பார்க்கப்பட்டது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண



மேலும் படிக்க: 'தி டான்' கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் இன்று: இது தான் பிராட்மேனின் முதல் சர்வதேச போட்டி!