கடந்த ஒரு மாத காலமாக இந்திய அணியில் பல சர்ச்சைகள், கருத்துகள் என பூகம்பம் வெடித்து வருகிறது.தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் டி20 தொடரிலும் விளையாட இருக்கிறது. இதற்கான சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தென்னாப்ரிக்கா சென்று கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தங்களை வீரர்கள் தனிமைப்படுத்தி கொண்டனர். 


 ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் தென்னாப்ரிகாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்திருக்கும் நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது.


 






இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், டி 20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தபோது, பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. என்னுடைய முடிவை மாற்றச்சொல்லி பிசிசிஐ தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இந்த முடிவு சரியானதுதான் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது என்றார். 


ஆனால், கோலி சொல்லியதற்கு முன்னுக்கு பின் முரணாக பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியது இருந்தாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில், “டி20 கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம் என நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், அவர் கேப்டன் பதவியில் தொடர விரும்பவில்லை” என தெரிவித்தார். 


இருவரும் கருத்துக்களும் தற்போது ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு இருப்பதால், ட்விட்டரில் கோலி ரசிகர்கள் #worldstandwithkohli என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக களமிறங்கிய கங்குலி ரசிகர்கள், இவர்களுக்கு நாங்கள் என்ன சலித்தவர்களா என்று அவர்களும் #nationstandwithdada என்ற  ஹேஸ்டேக்கை சமூக வலைத்தளங்களில் பறக்க விட்டு வருகின்றனர். 






மேலும், இதற்கு காரணம் ரோஹித் சர்மா என்றும், அவரே நல்லா இருந்த கரையான் புற்றுக்குள் கருநாகம் புகுந்த கதையாகி விட்டது என்று கோலியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பரவி வரும் புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணி வீரர்கள், தென்னாப்பிரிக்காவில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் கால்பந்து விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 
 


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண