இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மத்திய பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியில் 4 விக்கெட் எடுத்து அசத்தியுள்ள நிலையில் அவரை ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் எடுத்து வைக்க தொடங்கியுள்ளனர்.
முகமது சமி காயம்:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பையின் போது காலில் காயம் ஏற்ப்பட்டது. இதன் காரணாமாக கடந்த ஓராண்டாக முகமது ஷமி எந்த போட்டியிலும் விளையாடவில்லை. மேலும் காலுக்கு அறுவை சிகிச்சையும் செய்துக் கொண்டார் முகமது ஷமி. இதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்க்கொண்டு காயத்தில் இருந்து குணமாகி வந்தார்.
ஆஸி தொடரில் இடமில்லை:
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆனால் முகமது சமி பெயர் அணியில் இடம்பெறவில்லை. கேப்டன் ரோகித் சர்மாவும், முகமது ஷமி நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடமல் உள்ளார். அதனால் அவரை நேரடியாக ஆஸ்திரேலியா பயணத்தில் ஆட வைத்து ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: Ramandeep Singh: அடிச்சா சிக்ஸரு! இந்திய கிரிக்கெட்டின் புது ஸ்டார் ராமன்தீப் சிங்கா?
கம்பெக் கொடுத்த சமி:
இந்த நிலையில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் முகமது ஷமி தற்போது ஆடி வருகிறார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் பின்னர் களமிறங்கிய மத்திய பிரதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. நேற்றைய நாளில் பந்து வீசிய முகமது ஷமிக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் முகமது ஷமி சிறப்பாக பந்து விசி அசத்தினார். 19 ஒவர்கள் வீசிய ஷமி 54 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இந்திய அணியில் ஷமி தேர்வாகாத நிலையில் தனது உடல் தகுதியை நிருபிக்க இந்த ரஞ்சிப் போட்டி அவருக்கு உதவியாக இருக்கும். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முகமது சமி சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் தற்போது எடுத்து வைக்க தொடங்கியுள்ளனர்.