இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றவது டி20 போட்டியில் ஈசல்களால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது சமூக வலைதள பக்கங்களில் கவனம் பெற்று வருகிறது. 


மூன்றாவது டி20:


கிரிக்கெட் போட்டிகள் பொதுவாக மழை காரணமாகவே அல்லது புழுதி புயல், மூடு பனி இதன் காரணமாக போட்டி தாமதமாகி பார்த்து இருப்போம் ஆனால் நேற்று இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதிய போட்டி ஈசல் பூச்சிகளால் சிறிது தடைப்பட்ட அரிய நிகழ்வு நடைப்பெற்றது. 


இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சுரியனில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. இந்திய அண்யில் திலக் வர்மா சதமடித்து அசத்தினார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். 






குறுக்கே வந்த ஈசல்கள்: 


அடுத்ததாக தங்களது இன்னிங்சை தென் ஆப்பிரிக்கா அணி தொடங்க, அப்போது மைதானத்தை சுற்றி எல்லா இடங்களிலும் ஈசல்கள்  சுற்றின. முதலாவது ஒவரை அர்ஷ்தீப் சிங் வீசினார், மைதானத்தில் ஈசல்கள் சுற்றிய நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடக்க வீரர் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் கண்ணில் மோதிவிட்டு சென்றது. எப்படியோ முதலாவது ஓவர் முடிந்த நிலையில் இரண்டாவது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீச வந்தார். அப்போது மைதானம்  முழுவதும் ஈசலகள் அதிகமாக தொடங்கின அப்போது கேப்டன் சூர்ய குமார் யாதவுடன் போட்டி நடுவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஈசலகள் குறையும் வரை போட்டியை நிறுத்தி வைக்கலாம் என்று முடிவு செய்தனர். அதன் பின்னர் மைதானத்தில் இருந்த விளக்குகளை அங்காங்கே நிறுத்தி வைத்தனர். இதன் பின்னர் ஈசல்கள் செத்து விழ தொடங்கின. 


இதையும் கொஞ்சம் படிங்க: Sanju Samson father : ”என் மகன் வாழ்க்கையை அழித்த நான்கு பேர்” கொதித்து எழுந்த சாம்சனின் தந்தை


அதன் பின்னர் மைதான ஊழியர்கள் புற்களில் கிடந்த ஈசல் பூச்சிகளை அகற்றினர். அதன் பின்னர் போட்டியானது தொடங்கி நடைப்பெற்றது. ஈசல் பூச்சிகளால் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் போட்டியானது நிறுத்தப்பட்டது ரசிகர்கள் இடையே நகைப்பை ஏற்ப்படுத்தியது.