என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையே அழித்தது இந்த நான்கு பேர் தான் என சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 


தோனி, கோலி, ரோகித் தான் காரணம்:


இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வரும் என் மகன் சஞ்சு சாம்சன் ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார், இதற்கு காரணம் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் தான் முழுக்காரணம் என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இது குறித்து அவர் பேசிய வீடியோவில் , என் மகன் சஞ்சு சாம்சன் 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் என் மகனின் வாழ்க்கையை சீரழித்த நான்கு பேர் இருக்கிறார்கள் அதில் இந்திய முன்னாள் கேப்டன் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா,முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரால் தான் என் மகனின் 10 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை வீணாகப் போனது என்று கூறியுள்ளார். மேலும் என் மகன் மனதளவில் வலிமையானவன் அதனால் இதிலிருந்து தைரியமாக மீண்டு வந்துவிட்டான் எனவும் தெரிவித்திருந்தார்.






சாம்சன் குறித்து ஸ்ரீ காந்த்:


என் மகன் வங்கதேச அணிக்கு எதிராக சதமடித்ததை கிரிக்கெட் வர்ணனையாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கிண்டல் அடித்திருந்தார். ”சஞ்சு சாம்சன் எந்த நாட்டு அணிக்கு எதிராக சதமடித்திருந்தார், வங்கதேச அணிக்கு எதிராக தானே, அவரை நல்ல வீரர் என்று கூறுகிறார்கள் ஆனால் அவ்ர பெரியதாக விளையாடி நான் பார்த்ததே இல்லை” என ஸ்ரீ காந்த் கூறியது எங்களை மனதளவில் காயப்படுத்தியது. ஸ்ரீ காந்த் வங்கதேச அணிக்காக அதிகபட்சமாக அடித்ததே 28 ரன்கள் தான். ஆனால் என்னுடைய மகன் சதமடித்துள்ளான் என்று சாம்சனின் தந்தை பேசியிருந்தார். 


இப்போது எனது மகன் சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு காரணம் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யா குமார் யாதவ் தான் காரணம் என்றும் பாராட்டியுள்ளார். இவர்கள் இருவர் மட்டும் இல்லையென்றால் என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை, கடந்த காலத்தை போலவே இருந்திருக்கும் என்று கூறினார். டெல்லியில் காவல்துறையில் பணிபுரிந்த சாம்சனின் தந்தை தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கைகாக வேலையை விட்டுவிட்டு கேரளாவிற்கு குடிப்பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Kanguva Review in Tamil: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ