ஐபிஎல் சீசன் 18:


ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. முன்னதாக மெகா ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில், வீரர்களை தக்கவைப்பது, வீரர்களை மாற்றுவது என பல்வேறு மாற்றங்கள் நடைபெறும் என்பதால் எந்தெந்த வீரர்களை அணி தக்கவைக்கும் யாரை கழட்டி விடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அணிகள் தங்களது பயிற்சியாளர்களையும் மாற்றி வருகிறது.


அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் அணியின் புதிய பயிற்சியாளராக நேற்று (செப்டம்பர் 6) நியமித்து அறிவிப்பு வெளியிட்டது. 


மற்றொரு சவால்:


இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக இணைந்தது குறித்து ராகுல் டிராவிட் பேசியுள்ளார். அதில்,"கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹோக் அணிக்கு பயிற்சியாளராக திரும்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். உலகக் கோப்பைக்குப் பிறகு, மற்றொரு சவாலை ஏற்றுக் கொள்ள இதுவே சரியான தருணம். அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறந்தது" என்று கூறியுள்ளார். இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடிய ராகுல் டிராவிட் எந்தவொரு கோப்பையையும் வெல்லாமல் ஓய்வு பெற்றார்.


ஆனாலும் தொடர்ந்து இந்திய அணிக்காக தன்னுடைய பங்களிப்பை அவர் கொடுத்துக் கொண்டு தான் இருந்தார். இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக இருந்து அந்த அணியைக் கோப்பை வெல்லவைத்தார். அதன் பிறகு இந்திய அணிக்குப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர் டி 20 உலகக் கோப்பையை வெல்லவைத்தார்.அந்த வெற்றியோடு அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார்.





இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் தன்னுடைய பணியை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Paris Paralympics 2024: பாரீஸ் பாராலிம்பிக்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்ன? பதக்க வாய்ப்பு உள்ளதா?


மேலும் படிக்க: Rishabh Pant: டிராவிட்டுக்கும் கம்பீருக்கும் உள்ள வித்தியாசம்.. உண்மையை உடைத்த ரிஷப் பண்ட்