Ollie Pope: சச்சின் கூட செய்யல..ஒல்லி போப் செய்த வரலாற்று சாதனை! என்ன?

ஏழு வெவ்வேறு அணிகளுக்கு எதிராக ஏழு சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் இங்கிலாந்து அணி வீரர் ஒல்லி போப்.

Continues below advertisement

இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட்:

இலங்கை அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவின் படி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.

Continues below advertisement

வரலாற்று சாதனை படைத்த ஒல்லி போப்:

ஒல்லி போப் மற்றும் ஹேரி ப்ரூக் களத்தில் நிற்கின்றனர். முன்னதாக ஒல்லி போப் முதல் நாள் முடிவில் 103 பந்துகளுக்கு 103 ரன்கள் எடுத்திருந்தார். 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். அந்த வகையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது அவரது ஏழாவது டெஸ்ட் சதம் ஆகும். இதன் மூலம் அவர் ஏழு அணிகளுக்கு எதிராக ஏழு சதங்களை அடித்துள்ளார்.

ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் ஒரு சதம் என்ற அடிப்படையில் தனது முதல் ஏழு சதங்களையும் ஏழு வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்து அவர் சாதனை செய்துள்ளார். இதற்கு முன் கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் இப்படி ஒரு விசித்திரமான சாதனையை செய்தது இல்லை.

2020 ஆம் ஆண்டு ஒல்லி போப் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து இருந்தார். அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக 2022 இல் ஒரு சதம் அடித்தார். தொடர்ந்து பாகிஸ்தான், அயர்லாந்து, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக சதங்களை அடித்து இருந்தார். தற்போது இலங்கை அணிக்கு எதிராக தனது ஏழாவது சதத்தை அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Paris Paralympics 2024: பாரீஸ் பாராலிம்பிக்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்ன? பதக்க வாய்ப்பு உள்ளதா?

 

மேலும் படிக்க: Rishabh Pant: டிராவிட்டுக்கும் கம்பீருக்கும் உள்ள வித்தியாசம்.. உண்மையை உடைத்த ரிஷப் பண்ட்

Continues below advertisement