புரோ கபடி லீக்:
10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
முன்னதாக, தமிழ் தலைவாஸ் அணி வீரர்களிடம் நமது ABP நாடு சார்பில் நேர்காணல் எடுக்கப்பட்டது. அதில் அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை கீழே பார்ப்போம்:
பிடித்த நடிகர்:
உங்களுக்கு பிடித்த தமிழ் சினிமா நடிகர் யார் என்று தமிழ் தலைவாஸ் அணியின் வீரர் ஹிமான்ஷுவிடம் கேள்வியை வைத்தோம். அதற்கு பதிலளித்த அவர், “ ரஜினிகாந்த்” என்று பதிலளித்தார்.
அப்போது வீரர்களிடம் கபடி விளையாட்டின் மீதான ஈர்ப்பு எப்போது வந்தது என்ற கேட்டோம். அதற்கு அவர்கள், “ சின்ன வயதில் இருந்து ஜாலியாக ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடி கொண்டிருந்தோம். அதில் கபடி மீதான ஈர்ப்பு தானாகவே வந்தது. அப்படித்தான் எங்கள் வாழ்க்கையில் கபடி தொடர்ந்து வந்தது.
பள்ளியில் படித்த வேலைகளில் PT சார் கபடி விளையாட கற்றுகொடுத்தார். அது கல்லூரிகளிலும் தொடர்ந்தது. பள்ளியில் படித்த போது கபடி பற்றி அதிகம் தெரியவில்லை ஆனால் கல்லூரி காலங்களில் தான் அதைப்பற்றி தெரிந்தது.” என்றனர்.
வெற்றி முனைப்பில் தமிழ் தலைவாஸ்:
அதேபோல், இனி வரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்றும் தமிழ் தலைவாஸ் அணியினர் சூளுரைத்தனர். அந்த வகையில், தற்போது 8 போட்டிகள் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளை பெற்றுள்ள அந்த அணி 12 புள்ளிகளுடன் 11 வது இடத்தில் இருக்கிறது.
இதனிடையே, டிசம்பர் 31 ஆம் தேதி நொய்டாவில் நடைபெற உள்ள போட்டியில் Bengaluru Bulls அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது. நிச்சயம் இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறும் என்று நம்புவோம்.
மேலும் படிக்க: Shubman Gill: 35 டெஸ்ட் இன்னிங்ஸ்... அஸ்வினை விட கம்மியான ரன்கள் எடுத்த சுப்மன் கில்... என்னதான் ஆச்சு! விவரம் உள்ளே!
மேலும் படிக்க: Watch Video: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்... விராட் கோலியை பாராட்டிய ரோகித் சர்மா... இதுதான் காரணமா? வைரல் வீடியோ!