அரையிறுதியில் பாகிஸ்தான் அணியின் நலனுக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதற்கு பதிலாக மூன்றாவது வீரராக நீங்கள் களமிறங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமுக்கு முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி அட்வைஸ் கொடுத்துள்ளார்.


எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் நவம்பர் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.


இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகிறது. நவம்பர் 10ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் சந்திக்கிறது. முதலாவது அரையிறுதி சிட்னி மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதி  அடிலெய்டு மைதானத்திலும் நடைபெறுகிறது.


சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் இடம்பெற்ற உலகக் கோப்பையை நடத்தும் அணியும் நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியா வெளியேறியது. இலங்கை,  அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய பிற அணிகளும் வெளியேறின. அந்தச் சுற்றிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் வெளியேறின.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் இந்த தொடரில் ஜொலிக்கவில்லை.


குரூப் 2 பிரிவில் முதல் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொண்டபோது அவர் ரன்கள் எதுவும் எடுக்காமல் 'டக்' அவுட்டாகி அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய  அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் 4 ரன்களிலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.


கடைசியாக வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் இரட்டை இலக்க ஸ்கோரை பதிவு செய்தார். அதுவும் அவர் 33 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். மொத்தம் 35 ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார்.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகவே இருந்தது. இதனால், பாபர் ஆசாமை கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்க வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போர்கொடி உயர்த்தத் தொடங்கினர்.


நெதர்லாந்திடம் தென் ஆப்பிரிக்கா தோல்வியைத் தழுவியதாலும், வங்கதேசத்தை பாகிஸ்தான் வென்றதாலும் அந்த அணி அரையிறுதியை உறுதி செய்தது. இதனால், அந்நாட்டு ரசிகர்களின் கோபம் சற்றே தணிந்தது. இந்த நிலையில் தான் ஷாகித் அஃப்ரிடி அவரை விமர்சித்துள்ளார்.




Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நீங்கள் ஆலோசனைகளுக்கு செவி மடுக்க வேண்டும் பாபர் ஆசாம்.  பவர் ப்ளே ஓவரில் முகமது ஹாரிஸை பவுண்டரி எல்லையில் நிறுத்த வேண்டும். அதேபோன்று பாபர் ஆசாம் மூன்றாவது வீரராக களமிறங்க வேண்டும். தொடக்க ஆட்டக்காரராக பாபர் களமிறங்கினால் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. டீமின் நலனுக்காக கேப்டனாக இதை அவர் செய்தாக வேண்டும். 


T20 World Cup 2022: எந்த அணி ஃபைனலுக்குத் தகுதி பெறும்..? தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ஜாலி ட்வீட்


இஃப்திகார் அல்லது ஷான் மசூத் ஆகிய வீரர்கள் விளையாடும்போது அவர்களின் உடல்மொழியை பாபர் ஆசாம் கவனிக்க வேண்டும். அவர்கள் பந்தை அடிக்க வேண்டும் என்று நோக்கத்துடன் மட்டையை சுழற்றுகிறார்கள். பேட்டிங் செய்பவர்களுக்கு அதுபோன்ற நோக்கம் இருக்க வேண்டும். அதுதான் கிரிக்கெட். 30 அல்லது 35 பந்துகளுக்கு ஒரு ரன்னை எடுத்தால் எப்படி? அதில் என்ன ஆட்டம் இருக்கிறது? என்றார் ஷாகித் அஃப்ரிடி.