எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் நவம்பர் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.


இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகிறது. நவம்பர் 10ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் சந்திக்கிறது. முதலாவது அரையிறுதி சிட்னி மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதி  அடிலெய்டு மைதானத்திலும் நடைபெறுகிறது.


சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் இடம்பெற்ற உலகக் கோப்பையை நடத்தும் அணியும் நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியா வெளியேறியது. இலங்கை,  அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய பிற அணிகளும் வெளியேறின. அந்தச் சுற்றிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் வெளியேறின.


ICC Men's Player of the Month award: அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்...!


இந்நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் உலகக் கோப்பை டி20 தொடர் குறித்து ஜாலியாக ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், நாய் ஒன்று மதில்சுவரில் 2 முன்பக்க கால்களையும், மறுமுனையில் தென்னை மரத்தில் 2 கால்களையும் வைத்து ஏறி மதில் சுவரில் ஏறி வெளியே என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்ப்பது போன்று உள்ளது.


இந்த வீடியோவுடன் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி ஃபைனலுக்குத் தகுதி பெறும் என்று எதிர்காலத்தை கணித்து கூறுமாறு இந்த உயிரினத்திடம் கேட்டேன். 






இந்த நிகழ்காலத்தின் 'சுவர்' வழியாக எதிர்காலத்தை பார்க்க இந்த புத்திசாலித்தனமான வழியை அது கண்டுபிடித்தது. அது என்ன பார்த்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று அந்தப் பதிவில் ஆனந்த் மஹிந்திரா கேள்வி எழுப்பி குறிப்பிட்டுள்ளார்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பைனலுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றன. எந்த அணி ஃபைனலுக்கு செல்லும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?